Thursday, November 7, 2019


ஆறு மருத்துவ கல்லுாரிகள் அமைக்கும் பணி துவக்கம்

Added : நவ 06, 2019 23:32

சென்னை: ''தமிழகத்தில் புதிதாக, ஆறு மருத்துவ கல்லுாரிகள் அமைப்பதற்கான பணிகள் துவங்கப் பட்டுள்ளன,'' என, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு கூறினார்.தமிழகத்தில், 26 அரசு மருத்துவ கல்லுாரிகளில், 3,500க்கும் மேற்பட்ட, எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.

இதன் வாயிலாக, நாட்டிலேயே அதிக, எம்.பி.பி.எஸ்., இடங்கள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.இந்நிலையில், தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரி இல்லாத விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், நீலகிரி ஆகிய ஆறு மாவட்டங்களில், மருத்துவ கல்லுாரி அமைக்க, மத்திய அரசிடம், தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, ஆறு மருத்துவ கல்லுாரிகள் அமைக்க, அனுமதி அளித்துள்ளது.அதன்படி, ஒவ்வொரு மருத்துவ கல்லுாரியும், மத்திய அரசின், 195 கோடி ரூபாய்; மாநில அரசின், 130 கோடி ரூபாய் என, மொத்தம், 325 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது.மொத்தம், 1,950 கோடி ரூபாய் மதிப்பில், ஆறு மருத்துவ கல்லுாரிகள் அமைக்கும் பணிகளை, தமிழக அரசு துவக்கிஉள்ளது.இது குறித்து, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு கூறியதாவது:மருத்துவ கல்லுாரிகளை அமைப்பதற்கான, முதற்கட்ட பணிகள் துவக்கப் பட்டுள்ளன. இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்த, அனைத்து விபரங்களும், மத்திய அரசுக்கு அனுப்பப் பட்டுள்ளது.மாநில அரசின் நிதி, தயார் நிலையில் உள்ளது. விரைவில், மத்திய அரசின் நிதி கிடைத்து விடும். அதன்பின், கட்டுமான பணிகள் துவங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

ஜப்பான்

ரூ.270 கோடி உதவிஅரசின் பொதுப்பணித் துறை வாயிலாக, அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லுாரிகளுக்கு, கட்டடங்கள் கட்டப்படுகின்றன. சென்னை கீழ்ப்பாக்கம், கோவை, மதுரை அரசு மருத்துவக்கல்லுாரிகளில், இட நெருக்கடியை தவிர்க்க, கூடுதல் கட்டடங்கள் கட்ட, அரசு முடிவெடுத்துள்ளது. இந்த பணிகளுக்காக, ஜப்பான் பன்னாட்டு வங்கி, 270 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இதையடுத்து, கீழ்பாக்கத்தில், 90 கோடி ரூபாய்; மதுரையில், 70 கோடி ரூபாய்; கோவையில், 110 கோடி ரூபாயில், கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கான அரசாணையை, நிதித்துறை வெளியிட்டதும், கட்டுமான பணிகளை, பொதுப்பணித் துறை துவக்க உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024