Monday, January 6, 2020

4 மருத்துவ கல்லூரிகள்; தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு அனுமதி

Added : ஜன 06, 2020 01:18

சென்னை : தமிழகத்தில், மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லுாரிகளை அமைக்க, தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது.

இதன்படி, திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களில், மருத்துவக் கல்லுாரி அமைக்க, 2018 அக்டோபரில், மத்திய அரசு அனுமதி அளித்தது.இதன் தொடர்ச்சியாக, நவம்பரில், திருவள்ளூர், நாகை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், கூடுதலாக மூன்று புதிய மருத்துவக் கல்லுாரிகள் துவங்க அனுமதி கிடைத்தது.

இந்நிலையில், அரியலுார், கள்ளக்குறிச்சி, கடலுார், காஞ்சிபுரம் மாவட்டங்களில், மருத்துவக் கல்லுாரிகள் அமைக்க அனுமதி கோரி, மத்திய தொழில்நுட்ப மதிப்பீடு குழுவிடம், தமிழக அரசு விண்ணப்பித்தது.அதையேற்று, நான்கு மாவட்டங்களில் மருத்துவக் கல்லுாரிகள் துவக்க, தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு அனுமதி அளித்துள்ளது. இதை, தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024