Saturday, January 11, 2020

நேரடி ஒளிபரப்பில் நிர்பயா குற்றவாளிகள் தூக்கு: மத்திய அரசுக்கு கோரிக்கை

Updated : ஜன 10, 2020 22:34 | Added : ஜன 10, 2020 22:32

புதுடில்லி: நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என, இந்தியாவில் பலாத்காரத்திற்கு எதிரான மக்கள்(people Against Rapes in India(pari) என்ற தொண்டு நிறுவனம், மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக அந்த தொண்டு நிறுவனத்தின் தலைவர் யோகிதா பயானா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் 22 ல் நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை நேரடியாக ஒளிபரப்பு செய்ய தேசிய மற்றும் சர்வதேச மீடியாக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இது, நமது வரலாற்றில், நீதி மற்றும் பெண்கள் பாதுகாப்பு சர்வதேச தரத்தில் உள்ளது என்பதை உலகிற்கு எடுத்து காட்டும் வகையில், புரட்சிகரமான முடிவாக இருக்கும். இதனால் ஏற்படும் தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும். பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புதிய மாற்றத்தை தூண்டுவதற்கு இந்திய மீடியாக்களின் பங்கு பெரிய அளவில் பாராட்டப்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு, மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சகம் இன்னும் பதிலளிக்கவில்லை.

கடந்த 2013ம் ஆண்டு, டில்லியில் 'நிர்பயா' என்ற மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். இதில், அந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ஒருவர் சிறுவன் என்பதால், அவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 5 பேர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் ராம் சிங் என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்ற நான்கு பேருக்கும் விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இதனை டில்லி ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன. கருணை மனு நிராகரிக்கப்பட, சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, 4 பேரையும் வரும் 22 காலை 7 மணிக்கு திஹார் சிறையில்தூக்கு தண்டனையை நிறைவேற்ற டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024