Saturday, January 11, 2020

ஹஜ் பயணிகள் தேர்வுக்கான குலுக்கல்

Added : ஜன 10, 2020 21:50


சென்னை: ஹஜ் பயணியரை தேர்வு செய்வதற்கான குலுக்கல், நாளை மறுநாள் நடக்க உள்ளது.

தமிழகத்தில் இருந்து, ஹஜ் பயணம் செல்ல, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிடம், ஏழு குழந்தைகள் உட்பட, 6,028 பேர், 'ஆன்லைனில்' விண்ணப்பித்துள்ளனர். ஹஜ் பயணியரை, குலுக்கல் முறையில் தேர்வு செய்ய, மாநில ஹஜ் குழுவிற்கு, இந்திய ஹஜ் குழு அனுமதி அளித்துள்ளது.அதன்படி, குலுக்கல் நிகழ்ச்சி, நாளை மறுநாள் காலை, 11:30க்கு, சென்னை, ராயப்பேட்டை, புதுக் கல்லுாரியில் உள்ள, ஆணைக்கார் அப்துல் கக்கூர் அரங்கில் நடக்க உள்ளது.

ஹஜ் பயணம் செல்லும், புனிதப் பயணியருக்கு, தமிழக அரசு மானியம் வழங்குகிறது.எனவே, குலுக்கலில் தேர்வு செய்யப்படும் பயணியர், தங்களின் தனிப்பட்ட சேமிப்பு வங்கி கணக்கு புத்தகத்தின் நகலை, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு, அனுப்பி வைக்க வேண்டும். ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பித்தவர்கள், குலுக்கலில் பங்கேற்க வேண்டும் என, மாநில ஹஜ் குழு தெரிவித்துஉள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024