குடும்பத்தாரை இறுதியாக பார்க்க அனுமதி 'நிர்பயா' கைதிகளுக்கு திஹார் சிறை கடிதம்
Added : பிப் 22, 2020 21:33
புதுடில்லி, : 'நிர்பயா' வழக்கில், துாக்கு தண்டனை கைதிகள் நான்கு பேரிடம், இறுதியாக குடும்பத்தாரை பார்ப்பதற்கான விருப்பத்தை தெரிவிக்குமாறு, திஹார் சிறை நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது. டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, ஒரு கும்பலால், 2012ல், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு, உயிரிழந்தார்.
இவ்வழக்கில், முகேஷ் குமார் சிங், 32, பவன் குப்தா, 25, வினய் குமார் சர்மா, 26, அக் ஷய் குமார், 31, ஆகியோரின் துாக்கு தண்டனையை நிறைவேற்ற, இரு முறை தேதி குறிக்கப்பட்டு, தள்ளி வைக்கப்பட்டது. மூன்றாவது முறையாக மார்ச், 3ம் தேதி காலை, 6:00 மணிக்கு நிறைவேற்ற, நீதிமன்றம் புதிய, 'வாரன்ட்' பிறப்பித்துஉள்ளது. இந்நிலையில், குற்றவாளிகள் நான்கு பேருக்கும், குடும்பத்தாரை இறுதியாக பார்க்க விரும்புவது குறித்து, திஹார் சிறை நிர்வாகம் கடிதம் எழுதி உள்ளது. இதில், முகேஷ், பவன் இருவரும், துாக்கு தண்டனைக்கு இரண்டாம் முறை நாள் குறிக்கப்பட்ட, பிப்.,1க்கு முன், தங்கள் குடும்பத்தினரை இறுதியாக சந்தித்து விட்டனர்.
அதனால், தற்போது அக் ஷய் குமார், வினய் குமார் ஆகியோரிடம், இறுதி சந்திப்பு குறித்து தெரிவிக்குமாறு, திஹார் சிறை நிர்வாகம் கேட்டுள்ளது. அத்துடன், மார்ச், 3ல், துாக்கு தண்டனையை நிறைவேற்றும் நபரை, இரண்டு நாட்களுக்கு முன் அனுப்புமாறு, உ.பி., சிறை நிர்வாகத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளது. இதற்கிடையே, வினய் குமாரின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் விலகியதைத் தொடர்ந்து, புதிதாக நியமிக்கப்பட்ட, வழக்கறிஞர் ரவி காசியை பார்க்க, வினய் குமார் மறுத்து விட்டார்.
வினய் குமார் மனு நிராகரிப்பு
துாக்கு தண்டனை கைதி வினய் குமாரை மனவள ஆய்வு மையத்திற்கு அனுப்பக் கோரும் மனு தொடர்பாக, திஹார் சிறை, டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:'வினய் குமாருக்கு மனநிலை சரியில்லை' என, அவர் வழக்கறிஞர் கூறுவது தவறு. வினய் குமார், வேண்டுமென்றே சுவரில் மோதி, தன் தலையில் காயம் ஏற்படுத்திய காட்சி, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
அத்துடன், தன் தாய் மற்றும் வழக்கறிஞரை கூட அவருக்கு அடையாளம் தெரியவில்லை என, கூறுவதிலும் உண்மையில்லை. தாயிடம் இருந்து வந்த இரு அழைப்புகளுக்கு, அவர் பதில் அளித்துள்ளார். ஆகவே, அவருக்கு மனநிலை சரியில்லை என கூறுவது பொய். அவர் காயங்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இத்துடன், திஹார் சிறை சார்பில் ஆஜரான மனநல மருத்துவரும், நான்கு கைதிகளின் உடல் நிலை நன்றாக உள்ளதாக சான்று அளித்தார். இதை ஏற்று, வினய் குமாரின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

No comments:
Post a Comment