ஓய்வுபெற்றோரின் மருத்துவ செலவு மனிதாபிமான முறையில் பரிசீலிக்க அறிவுரை
Added : பிப் 22, 2020 22:23
சென்னை :மருத்துவ செலவு அளிக்க கோரும் மனுவை, மனிதாபிமான முறையில் பரிசீலிக்கும்படி, தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஏ.சண்முகம்; ஓய்வுபெற்ற அரசு ஊழியர்.காப்பீட்டு திட்டத்தில், மாதந்தோறும் பங்களிப்பு தொகையை செலுத்தி வருகிறார்.2014ல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
2.74 லட்சம் ரூபாய், மருத்துவ சிகிச்சை கட்டணம் வந்தது.சிகிச்சை கட்டணத்தை அளிக்க கோரி, மருத்துவ மற்றும் ஊரக சுகாதார பணிகள் இயக்குனரகத்துக்கு விண்ணப்பித்தார்.காப்பீட்டு பட்டியலில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறி, மனுவை நிராகரித்தனர். இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
சிகிச்சை செலவை அளிக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால், அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பிய பின், 57 ஆயிரத்து, 890 ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல் வழங்கி, அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனுவை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து பிறப்பித்த உத்தரவு:ஓய்வூதியம் பெறும் ஊழியரை, மீண்டும் நீதிமன்ற கதவுகளை தட்ட வைத்துள்ளனர். இது, துருதிருஷ்டவசமானது.
வயதான பென்ஷன்தாரர்களை முறையாக நடத்தாதது, வருத்தம் அளிக்கிறது. நியாயமான மருத்துவ செலவுகளை கூட, அவர்களால் பெற முடியவில்லை.காப்பீட்டு திட்டத்துக்கான, மாத பங்களிப்பு தொகை, ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. வயதான காலத்தில் இவ்வளவு பெரிய மருத்துவ செலவு தொகையை, அவர்களால் கொடுக்க முடியாது. அதனால் அவர்கள், காப்பீட்டு திட்டத்தை நம்பி உள்ளனர்.பட்டியலில் இடம்பெறாத மருத்துவமனை எனக் கூறி, மருத்துவ செலவு கோரியதை நிராகரிக்கக் கூடாது என, இந்த நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டுள்ளது.
அவசர நிலை ஏற்படும்போது, பட்டியலில் இருக்கும் மருத்துவமனையை தேர்வு செய்து கொண்டிருக்க முடியாது. உயிரை காப்பாற்ற தான் நினைப்பர்.மக்கள் நல அரசு என்பதை, மூத்த குடிமக்களை எப்படி நடத்துகின்றனர் என்பதை வைத்து, கணக்கிட முடியும். மூத்த குடிமக்களை இப்படி நடத்தினால், அரசின் நிலை மோசமாக சித்தரிக்கப்படும். மருத்துவ செலவு கோரும் விண்ணப்பங்களை, மனிதாபிமான முறையில் பரிசீலிக்க வேண்டும். எனவே, நான்கு வாரங்களில், மீதி தொகை, ௨.௧௬ லட்சம் ரூபாயை வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

No comments:
Post a Comment