`அன்புக்கு முன்னால 130 கி.மீ தூரம் ஒண்ணும் பெருசில்லை!’ - மனைவிக்காக உருகும் கணவன்
கே.குணசீலன்ம.அரவிந்த்
ஆனால், கடவுள் எனக்கு காசைக் கொடுக்கவில்லை; கஷ்டத்தை மட்டும் தொடர்சியாகக் கொடுத்துவந்தார். ஆறு மாதத்திற்கு முன், மஞ்சுளாவிற்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டது. கன்னத்தில் தாங்க முடியாத வலி வந்து துடித்துபோக, எல்லோரும் ஜிப்மர் மருத்துவமனைக்கு போய் காட்டச் சொன்னார்கள். அங்கு சென்று பரிசோதனை செய்ததில், கன்னத்தில் கேன்சர் கட்டி இருப்பதாக டாக்டர்கள் கூற, எனக்கு உலகமே இருண்டதுபோல் ஆனது.
மனதைத் தேற்றிக்கொண்டு, இருக்கிறவரை அவளை கண் கலங்காமல் பார்த்துக்கொள்ளத் தொடங்கியதுடன், மாதம் ஒரு முறை சிகிச்சைக்காக அழைத்துச்சென்று வந்தேன். இந்த மாதத்திற்கான சிகிச்சைக்குச் செல்லவேண்டிய நேரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. `எப்படி போகப்போறோம். நம்மகிட்ட பணம் இல்லை. நம்ம சொன்னா யாரும் கேட்க மாட்டாங்க’ என எண்ணி, சைக்கிளிலேயே செல்ல முடிவெடுத்தேன்.
அறிவழகன்
மஞ்சுளா, `ஏங்க அவ்வளவு தூரம் சைக்கிளிலேயா போவது?’ என என்னை கஷ்டப்படுத்தக் கூடாது என வலியைப் பொறுத்துக் கொண்டு சொல்ல, `வலியைவிட தூரம் ஒண்ணும் பெருசு இல்லை’ என அவளிடம் கூறினேன். எனக்கு அவளும் அவளுக்கு நானும் உலகம் என்பதால், மறு பேச்சு பேசாமல் கிளம்பினாள். வழியில் இரண்டு இடங்களில் சைக்கிளை நிறுத்திவிட்டு சாப்பிட்டோம். கன்னத்தில் வலியிருந்தாலும் ஒரு இடத்தில்கூட அதை அவள் முகத்தில் காட்டவில்லை.
ஒரு இடத்தில் போலீஸார் தடுத்து, 'எங்க போறீங்க' எனக் கேட்க, நான் கூறியதைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போனதுடன், பாசத்துக்கு பக்கத்துல எதுவும் நிற்க முடியாது என தட்டிக்கொடுத்து டீயெல்லாம் வாங்கிக் கொடுத்து, `ஜாக்கிரதையா போய்ட்டு வாயா’ என தட்டிக்கொடுத்து அனுப்பினர்.
கே.குணசீலன்ம.அரவிந்த்
மனைவியுடன் அறிவழகன்
மஞ்சுளா, `ஏங்க அவ்வளவு தூரம் சைக்கிள்லேயா போவது?’ என என்னை கஷ்டப்படுத்தக்கூடாது என வலியைப் பொறுத்துக்கொண்டு சொல்ல, `வலியைவிட தூரம் ஒண்ணும் பெருசு இல்லை’ என அவளிடம் கூறினேன்.
கும்பகோணம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர், கேன்சர் நோயால் துடித்த தன் மனைவிக்கு சிகிச்சை அளிப்பதற்காக, ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் சைக்கிளில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். `அவளோட வலிக்கு முன்னால தூரம் ஒண்ணும் பெருசில்லை’ என அவர் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த மகாராஜபுரம் மணல்மேட்டு ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன். கூலி வேலை செய்துவருகிறார். இவருடைய இரண்டாவது மனைவி மஞ்சுளா, வயதான தம்பதிகளாக இவர்களுக்கு, மன வளர்ச்சி குன்றிய நிலையில் 7-ம் வகுப்பு படிக்கும் விஷ்ணு என்ற மகன் உள்ளார். அறிவழகன் தன் குடும்பத்தின்மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட மனைவி மஞ்சுளாவை கடந்த ஆறு மாதமாக சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அறிவழகன் அழைத்துச்சென்று வருகிறார். மாதம் ஒரு முறை ஹீமோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் 31-ம் தேதி, டாக்டர்கள் சிகிச்சைக்கு வர சொல்லியுள்ளனர்.

மனைவி மஞ்சுளாவுடன் முதியவர் அறிவழகன்
ஆனால், கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் போக்குவரத்து நிறுத்தபட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அறிவழகன், தன் மனைவியை எப்படி அழைத்துச்செல்லப்போகிறோம் என்ற கவலை சூழ்ந்துள்ளது. இதற்கிடையில், மஞ்சுளாவிற்கு கன்னத்தில் கேன்சர் பாதிப்பு இருப்பதால், வலி அதிகமாகியிருக்கிறது. ஒருபுறம் மனைவி வலியால் துடிக்க, மறுபக்கம் மனவளர்ச்சி குன்றிய மகன் என இவர்களை எண்ணி உள்ளுக்குள்ளேயே கலங்கியிருக்கிறார். இந்த நிலையில், எப்படியாவது மனைவி மஞ்சுளாவை சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என முடிவெடுத்த அறிவழகன், அதற்காகத் தயாரானார்.
மகனை அருகில் இருந்தவர்களிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, கடந்த 29-ம் தேதி, சாப்பாடும் தயார்செய்து எடுத்துக்கொண்டு, அதிகாலை 5 மணிக்கு தன்னுடைய சைக்கிளில் மனைவியை உட்கார வைத்து ஓட்டிக்கொண்டே புதுச்சேரிக்குக் கிளம்பிவிட்டார். அக்கம் பக்கத்தினர், `ஏம்பா ஊரடங்கு முடிஞ்சதும் போய் காமிச்சா என்ன?’ என கேட்க, `அவ வலியால் துடிக்கிறதை பார்க்கிற சக்தி எனக்கில்லை’ எனக் கூறிவிட்டு கட்டிய வேட்டியுடன், தோளில் துண்டை மட்டும் போர்த்திக்கொண்டு கிளம்பியுள்ளார்.
அணைக்கரை, வடலுார், கடலுார் வழியாக 130 கிலோமீட்டர் துாரம் கடந்து புதுச்சேரி மருத்துமனைக்கு இரவு 11 மணியளவில் சேர்ந்துள்ளனர். ஜிப்மர் மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவு மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருந்த நிலையில், தன் மனைவியின் நிலையையும், ஊரிலிருந்து சைக்கிளில் வந்தபோது ஏற்பட்ட கஷ்டத்தையும் மருத்துவர்களிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட மருத்துவர்கள் உடனே சிகிச்சையைத் தொடங்கியதுடன், அறிவழகனுக்கும் அவர் மனைவிக்கும் வேண்டிய உதவிகளைச் செய்துகொடுத்துள்ளனர். மேலும், இரண்டு நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்த டாக்டர்களிடம், `இந்த உதவியை என் உசுரு உள்ளவரை மறக்க மாட்டேன்’ எனக் கூறி அங்கிருந்து புறப்பட்டுள்ளார் அறிவழகன்.
இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் பலரும், கும்பகோணத்தில் உள்ள அறிவழகன் வீட்டிற்கு சென்று அவரைப் பாராட்டியும், உதவி செய்தும் வருகின்றனர். இதுகுறித்து அறிவழகனிடம் பேசினோம். ``எனக்கு என் குடும்பம்தான் உலகம். என்னுடைய முதல் மனைவி சுசிலா, பல ஆண்டுகளுக்கு முன்னர் நெஞ்சுவலியால் இறந்து விட்டார். மூத்த மகனான ரவி, சென்னையில் வேலைபார்த்து வருகிறான். முதல் மனைவி இறந்த பிறகு மஞ்சுளாவை திருமணம் செய்துகொண்டேன். இளைய மகன் மனவளர்ச்சி குன்றியவன். குறைந்த வருமானம் வந்தாலும் வாழ்கை மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்தது.
ஆனால், கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் போக்குவரத்து நிறுத்தபட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அறிவழகன், தன் மனைவியை எப்படி அழைத்துச்செல்லப்போகிறோம் என்ற கவலை சூழ்ந்துள்ளது. இதற்கிடையில், மஞ்சுளாவிற்கு கன்னத்தில் கேன்சர் பாதிப்பு இருப்பதால், வலி அதிகமாகியிருக்கிறது. ஒருபுறம் மனைவி வலியால் துடிக்க, மறுபக்கம் மனவளர்ச்சி குன்றிய மகன் என இவர்களை எண்ணி உள்ளுக்குள்ளேயே கலங்கியிருக்கிறார். இந்த நிலையில், எப்படியாவது மனைவி மஞ்சுளாவை சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என முடிவெடுத்த அறிவழகன், அதற்காகத் தயாரானார்.
மகனை அருகில் இருந்தவர்களிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, கடந்த 29-ம் தேதி, சாப்பாடும் தயார்செய்து எடுத்துக்கொண்டு, அதிகாலை 5 மணிக்கு தன்னுடைய சைக்கிளில் மனைவியை உட்கார வைத்து ஓட்டிக்கொண்டே புதுச்சேரிக்குக் கிளம்பிவிட்டார். அக்கம் பக்கத்தினர், `ஏம்பா ஊரடங்கு முடிஞ்சதும் போய் காமிச்சா என்ன?’ என கேட்க, `அவ வலியால் துடிக்கிறதை பார்க்கிற சக்தி எனக்கில்லை’ எனக் கூறிவிட்டு கட்டிய வேட்டியுடன், தோளில் துண்டை மட்டும் போர்த்திக்கொண்டு கிளம்பியுள்ளார்.
அணைக்கரை, வடலுார், கடலுார் வழியாக 130 கிலோமீட்டர் துாரம் கடந்து புதுச்சேரி மருத்துமனைக்கு இரவு 11 மணியளவில் சேர்ந்துள்ளனர். ஜிப்மர் மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவு மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருந்த நிலையில், தன் மனைவியின் நிலையையும், ஊரிலிருந்து சைக்கிளில் வந்தபோது ஏற்பட்ட கஷ்டத்தையும் மருத்துவர்களிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட மருத்துவர்கள் உடனே சிகிச்சையைத் தொடங்கியதுடன், அறிவழகனுக்கும் அவர் மனைவிக்கும் வேண்டிய உதவிகளைச் செய்துகொடுத்துள்ளனர். மேலும், இரண்டு நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்த டாக்டர்களிடம், `இந்த உதவியை என் உசுரு உள்ளவரை மறக்க மாட்டேன்’ எனக் கூறி அங்கிருந்து புறப்பட்டுள்ளார் அறிவழகன்.
இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் பலரும், கும்பகோணத்தில் உள்ள அறிவழகன் வீட்டிற்கு சென்று அவரைப் பாராட்டியும், உதவி செய்தும் வருகின்றனர். இதுகுறித்து அறிவழகனிடம் பேசினோம். ``எனக்கு என் குடும்பம்தான் உலகம். என்னுடைய முதல் மனைவி சுசிலா, பல ஆண்டுகளுக்கு முன்னர் நெஞ்சுவலியால் இறந்து விட்டார். மூத்த மகனான ரவி, சென்னையில் வேலைபார்த்து வருகிறான். முதல் மனைவி இறந்த பிறகு மஞ்சுளாவை திருமணம் செய்துகொண்டேன். இளைய மகன் மனவளர்ச்சி குன்றியவன். குறைந்த வருமானம் வந்தாலும் வாழ்கை மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்தது.
ஆனால், கடவுள் எனக்கு காசைக் கொடுக்கவில்லை; கஷ்டத்தை மட்டும் தொடர்சியாகக் கொடுத்துவந்தார். ஆறு மாதத்திற்கு முன், மஞ்சுளாவிற்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டது. கன்னத்தில் தாங்க முடியாத வலி வந்து துடித்துபோக, எல்லோரும் ஜிப்மர் மருத்துவமனைக்கு போய் காட்டச் சொன்னார்கள். அங்கு சென்று பரிசோதனை செய்ததில், கன்னத்தில் கேன்சர் கட்டி இருப்பதாக டாக்டர்கள் கூற, எனக்கு உலகமே இருண்டதுபோல் ஆனது.
மனதைத் தேற்றிக்கொண்டு, இருக்கிறவரை அவளை கண் கலங்காமல் பார்த்துக்கொள்ளத் தொடங்கியதுடன், மாதம் ஒரு முறை சிகிச்சைக்காக அழைத்துச்சென்று வந்தேன். இந்த மாதத்திற்கான சிகிச்சைக்குச் செல்லவேண்டிய நேரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. `எப்படி போகப்போறோம். நம்மகிட்ட பணம் இல்லை. நம்ம சொன்னா யாரும் கேட்க மாட்டாங்க’ என எண்ணி, சைக்கிளிலேயே செல்ல முடிவெடுத்தேன்.
அறிவழகன்
மஞ்சுளா, `ஏங்க அவ்வளவு தூரம் சைக்கிளிலேயா போவது?’ என என்னை கஷ்டப்படுத்தக் கூடாது என வலியைப் பொறுத்துக் கொண்டு சொல்ல, `வலியைவிட தூரம் ஒண்ணும் பெருசு இல்லை’ என அவளிடம் கூறினேன். எனக்கு அவளும் அவளுக்கு நானும் உலகம் என்பதால், மறு பேச்சு பேசாமல் கிளம்பினாள். வழியில் இரண்டு இடங்களில் சைக்கிளை நிறுத்திவிட்டு சாப்பிட்டோம். கன்னத்தில் வலியிருந்தாலும் ஒரு இடத்தில்கூட அதை அவள் முகத்தில் காட்டவில்லை.
ஒரு இடத்தில் போலீஸார் தடுத்து, 'எங்க போறீங்க' எனக் கேட்க, நான் கூறியதைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போனதுடன், பாசத்துக்கு பக்கத்துல எதுவும் நிற்க முடியாது என தட்டிக்கொடுத்து டீயெல்லாம் வாங்கிக் கொடுத்து, `ஜாக்கிரதையா போய்ட்டு வாயா’ என தட்டிக்கொடுத்து அனுப்பினர்.
No comments:
Post a Comment