விருதுநகரில் இன்று ஒரே நாளில் 11 கர்ப்பிணிகள் உள்பட 273 பேருக்கு கரோனா: 5 வங்கிகள் மூடல்
விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 11 கர்ப்பிணிகள், 13 சுகாதாரப் பணியாளர்கள் உள்பட 273 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
சென்னை, மதுரையைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் விருதுநகர் மாவட்டத்தில் 273 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் 11 பேர் கர்ப்பிணிகள், 13 பேர் சுகாதாரப் பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் 24 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தல் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,095 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 2006 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக விருதுநகரில் ஒரு வங்கியும், சாத்தூரில் 4 வங்கிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
குறிப்பாக 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வரும் கிராமப்புறத் தொழிலாளர்கள் வங்கியில் பணம் எடுக்க முடியாமலும் அன்றாட் செலவுகளுக்கு பணம் இல்லாததாலும் தவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment