Thursday, July 23, 2020

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு 7 நாள் தனிமை


வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு 7 நாள் தனிமை

Added : ஜூலை 22, 2020 22:43

புதுடில்லி : வெளிநாடுகளில் இருந்து டில்லி வருவோர், தங்கள் சொந்த செலவில், ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என, டில்லி விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக, சர்வதேச விமானங்களில் டில்லி வரும் பயணியர், தங்கள் சொந்த செலவில், ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, டில்லி விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:சர்வதேச விமானங்களில் டில்லி வரும் அனைவருக்கும், விமான நிலையத்தில் முதற்கட்ட பரிசோதனை நடத்தப்படும். பின், டில்லி அரசின் மையங்களில், அவர்கள், வைரஸ் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். பின், டில்லியில் தங்கியிருக்க விரும்புவோர், அரசு அங்கீகாரம் பெற்ற தனிமைப்படுத்தும் மையங்களில், ஏழு நாட்கள், தங்கள் சொந்த செலவில் தங்கியிருக்க வேண்டும்.

அதைத் தொடர்ந்து, தங்கள் வீடுகளில், ஏழு நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். விமானத்தில், முன்பதிவை உறுதி செய்யும் முன், இந்த விதிமுறைகளை ஏற்றுக் கொள்வதாக, துாதரக அலுவலகத்தில், அவர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும்.கர்ப்பிணியர், தொற்றால் மரணமடைந்த நபரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், கடுமையான காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர் ஆகியோருக்கு, இந்த விதிகளில் விலக்கு அளிக்கப்படும்.அவர்கள், இதற்கான இணைய முகவரியில், உரிய ஆவணங்களுடன் தகவல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024