கூகுள் - ஜியோ கூட்டணியால் கவலையில் சீன நிறுவனங்கள்..!
Updated : ஜூலை 26, 2020 23:39 | Added : ஜூலை 26, 2020 22:29
புதுடில்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ உடன் கூகுள் கூட்டணி அமைத்து இறங்குவதால், ஏற்கனவே இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீன நிறுவனங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளன.
கடந்த வாரம் கூகுள், ரிலையன்ஸ் ஜியோவில் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்வதாக அறிவித்தது. இந்த முதலீட்டை ரிலையன்ஸ் , இந்திய சந்தைக்கேற்ற வகையில் மலிவு விலை ஸ்மார்ட்போன் தயாரிப்பிற்கு பயன்படுத்த உள்ளது. இதன்மூலம் இதுவரை ஸ்மார்ட்போனே பயன்படுத்தாத 50 கோடி பேரின், குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் இந்தியர்களை இலக்காக கொண்டுள்ளது.
ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், இந்தியாவின் பதிவான ஸ்மார்ட்போன் விற்பனையில் 75 சதவீதத்திற்கும் மேல் சீன தயாரிப்புகளே ஆகும். 3வது இடம்பிடித்துள்ள தென்கொரியாவின் சாம்சங் விற்பனை 17 சதவீதத்திற்கு கீழே உள்ளது. ஜியோ - கூகுள் கூட்டணியில் உருவாகும் மலிவு விலை ஸ்மார்ட்போன் , சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மோசமான செய்தியாக அமைந்துள்ளது.கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பின், சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென பிரசாரம் வலுத்து வந்தது. இந்தியாவின் இறையாண்மைக்கும், தகவல் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருந்த டிக்டோக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்தியாவில் தற்போது சுமார் 45 கோடி பேர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் 50 கோடி பேரிடம் ஸ்மார்ட்போன் இல்லை. ஜியோ - கூகுள் கூட்டணி, இவர்களுக்கு மலிவு விலையில் ஸ்மார்ட்போனை அளிக்க திட்டமிட்டுள்ளது.டிஜிட்டல் மற்றும் தகவல் புரட்சியின் நன்மைகளை அவர்கள் இழக்கக்கூடாது என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும், ஆசிய பணக்காரரான முகேஷ் அம்பானி கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார். கூகுள் உடன் கூட்டணி அமைப்பதற்கான குறிக்கோள், தற்போதைய செலவிற்கு ஏற்ப ஸ்மார்ட்போன்களை தயாரிப்பது என கூறியிருந்தார்.
இந்தியாவின் கிராமப்புற வாடிக்கையாளர்களை குறிவைத்து ஜியோ களமிறங்குகிறது. தற்போது 2 ஜியின் பயன்படுத்தி வரும் மொபைல் போன்களுக்கு பதிலாக 4 ஜி அல்லது 5ஜி ஸ்மார்ட்போன்களை அளிப்பது இரண்டு நிறுவனங்களுக்கும் வெற்றியை தரும். ரிலையன்ஸ் ஜியோ இணையச்சேவை திட்டங்களை அளிக்கும். கூகுள் தனது தேடுபொறி, யூடியூப், மேப் மற்றும் இதர சேவைகளை அளிக்கும். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்திய சந்தையில், சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டாப் 5 நிறுவனங்களில் சாம்ஸங் தவிர மற்ற 4 நிறுவனங்களுக்கு சீன நிறுவனங்கள் ஆகும். இந்தியாவில் ஏற்கனவே 4 ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மலிவு விலையில் சேவையளிக்கும் ஜியோ சாதனத்தை, 20 சதவீதம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவின் குறைந்த விலை ஸ்மார்ட்போன் சந்தையை கைப்பற்ற, இரு நிறுவனங்களும் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன் கூடிய 50 டாலருக்கு குறைவான விலை கொண்ட ஸ்மார்ட்போனை தயாரிக்க வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் கணிக்கின்றனர். இது மிகவும் கடினமான ஒன்று ஏனெனில், இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன் விலை தற்போதைக்கு 70 முதல் 100 டாலர் வரை உள்ளது. இந்த பிரிவில் ஜியோமி நிறுவனம் 40 சதவீதமும், சாம்ஸங் 17 சதவீதமும், ரியல்மீ 11 சதவீதம் சந்தையை பிடித்துள்ளன. மெமரி, சிப், டிஸ்பிளே உள்ளிட்டவை 50 டாலருக்கு மேல் ஸ்மார்ட்போன் விலையை உயர்த்த கூடும்.
இருந்த போதும் 50 அமெரிக்க டாலர் என்பது பெரும்பாலான கிராமப்புற இந்தியர்களால் வாங்க கூடிய விலையாக கூறப்பட்டுள்ளது. அவர்களை கவர முடிந்தால், சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கை 900 மில்லியனாக இருக்குமெனவும், வருமான நிலை உயர்வால், ஸ்மார்ட்போன் விலையும் மலிவாக இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment