வங்கி ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு வழங்க ஒப்பந்தம்
சென்னை 23.07.2020
வங்கி ஊழியர்களுக்கு 15 சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
வங்கியில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு கடந்த 2017 நவம்பர் முதல் ஊதிய உயர்வு வழங்காமல் நிலுவையில் இருந்து வந்தது. இதையடுத்து, வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.வேலைநிறுத்தப் போராட்டங் களும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், ஊதிய உயர்வுதொடர்பாக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 15 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு கடந்த 2017 நவம்பர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் காரணமாக, ரூ.7,898 கோடி கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 90 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் எனவும் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்துள் ளது.
No comments:
Post a Comment