ஏசி பயன்பாடு, தனிமனித இடைவெளி இல்லை; திண்டுக்கல் தலப்பாகட்டிக்கு ரூ.5,000 அபராதம்
திருப்பூர் 24.07.2020
திருப்பூரில் உள்ள திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணிக் கடைக்கு ரூ.5,000 அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் இன்று (ஜூலை 23) கூறியதாவது:
"கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் நடமாடும் துணிக்கடைகள், உணவகங்களில் குளிர்சாதன வசதி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பூர் வளர்மதி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணிக் கடை செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, ஆய்வு செய்தபோது, கடையில் குளிர்சாதன வசதி பயன்படுத்துவது தெரியவந்தது.
மேலும், தனிமனித இடைவெளியும் கடையில் பின்பற்றப்படவில்லை. இதையடுத்து மாநகராட்சி 3-ம் மண்டல பறக்கும் படையினர் ரூ.5,000 அபராதம் விதித்தனர்".
இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள்தெரிவித்தனர்.
No comments:
Post a Comment