நாட்டா தேர்வு ஆக., 29க்கு மாற்றம்
Added : ஜூலை 24, 2020 04:03
சென்னை : பி.ஆர்க்., என்ற, கட்டட கலை படிப்பில் சேருவதற்கான, 'நாட்டா' தேசிய நுழைவுத்தேர்வு ஆகஸ்ட், 29க்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, நாட்டா தேர்வு கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:தேசிய ஆர்கிடெக்ட் திறனறி தேர்வான, நாட்டா தேர்வின், வரையும் திறன் மற்றும் பொது திறனாய்வு தாள்களுக்கான தேர்வுகள், நேரடியாக மட்டுமின்றி, ஆன்லைனிலும் நடத்தப்பட உள்ளன.ஆகஸ்ட், 1ல் நடக்க இருந்த, வரையும் திறனுக்கான நாட்டா தேர்வு, ஆக., 29க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான பாடத் திட்டங்களும் மாற்றப்பட்டுள்ளன. பொது திறனாய்வு தேர்வு தேதி விரைவில் வெளியிடப்பட உள்ளது.தேர்வு எழுதும் மாணவர்கள், இதர தகவல்களை, www.coa.gov.in மற்றும், www.nata.in என்ற, இணையதளங்கள் வழியே தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு, helpdesk.nata2020@gmail.com என்ற முகவரியிலும், 93192 75557, 73034 87773 என்ற, எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment