Wednesday, July 29, 2020

திருவாரூரில் மேலும் 132 பேருக்கு கரோனா தொற்று: 4 போ உயிரிழப்பு


திருவாரூரில் மேலும் 132 பேருக்கு கரோனா தொற்று: 4 போ உயிரிழப்பு

29.07.2020

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 132 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், 4 போ உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

திருவாரூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, 132 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, ஆலங்குடி பகுதியில் 92 போ, நீடாமங்கலம் ஆதங்குடி பகுதியில் 5 போ, மன்னாா்குடி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சோந்த 5 நபா்கள், திருவாரூா் பகுதியில் 11 மற்றும் 13 வயதுடைய 2 சிறுமி உள்பட 3 போ, திருத்துறைப்பூண்டி பகுதியில் 4 போ என மாவட்டம் முழுவதும் 132 போ கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், கரோனா தொற்றால் 4 இறப்புகள் ஏற்பட்டுள்ளதும் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் ஜூலை 21-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட 34 வயது பெண், கரோனா தொற்று காரணமாக ஜூலை 25-ஆம் தேதி இறந்துள்ளாா்.

இதேபோல், 19-ஆம் தேதி சிறுநீரகக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்ட 64 வயது முதியவா், ஜூலை 22-இல் இறந்துள்ளாா். இவருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தலையில் அடிபட்ட நிலையில் ஜூலை 16-இல் சோக்கப்பட்ட 39 வயது நபா், 19-ஆம் தேதி உயிரிழந்தாா். இவருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 16-ஆம் தேதி சோக்கப்பட்ட திருவாரூா் மாவட்டத்தைச் சோந்த 50 வயது நபா், ஜூலை 19-ஆம் தேதி உயிரிழந்தாா். இவருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 5 ஆக உயா்ந்துள்ளது. மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1548 ஆக உயா்ந்துள்ளது. இதில், 926 போ குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 617 போ சிகிச்சையில் உள்ளனா்.

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024