Friday, July 24, 2020

பகுதி நேரமாக எம்.பில் முடித்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் - தணிக்கை அலுவலகத்திற்கு உத்தரவு.

பகுதி நேரமாக எம்.பில் முடித்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் - தணிக்கை அலுவலகத்திற்கு உத்தரவு.

Kalviseithi 10:20 AM INCENTIVE,

பகுதி நேரமாக எம்பில் முடித்த ஆசிரியர்களுக்கு இரண் டாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து , தணிக்கை அலுவலகத்திற்கு உத்தர விட்டப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழக அரசு பள்ளிக ளில் பணி புரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டம் படித்தால் ஒரு ஊக்க ஊதியமும் , எம்பில் அல்லது எம்எட் படித்தால் இரண்டாவது ஊக்க ஊதியமும் வழங்கப்படுகிறது.

கடந்த 2008 ம் ஆண்டுக்கு பிறகு , தொலைதூர கல்வி மூலமாக முடித்தவர்களுக்கு மட்டும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டாம் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது . அதே சமயம் , பகுதிநேரமாக படித்தவர்களை , ரெகுலர் போலவே கணக்கில் கொள்ளலாம் என யூஜிசி வழிகாட்டுதல் தெரிவித்திருந்தது. ஆனால் , கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மண்டலத்திற்குட் பட்ட ஈரோடு , திருப்பூர் , நீலகிரி , சேலம் , நாமக்கல் , தர்மபுரி , கிருஷ்ணகிரி , கோவை , கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆண்டு தணிக்கை நடந்தது. அப்போது , 2008 ம் ஆண்டுக்கு பிறகு பகுதி நேரமாக எம்பில் ஆய்வு படிப்பில் சேர்ந்து , அதற்கான ஊக்க ஊதியம் பெற்ற சுமார் 800 பட்டதாரி ஆசிரியர்கள் , அதனை திரும்ப செலுத் தும்படி உத்தரவிடப்பட்டது. ஒவ்வொருவரும் 150 ஆயிரம் முதல் 12 லட்சம் வரை திரும்ப செலுத்த வேண்டும் என்பதால் , பட்டதாரி ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது யூஜிசி வழிகாட்டுதலுக்கு எதிரானது என ஆசிரியர் கள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து , இந்த விவ காரம் குறித்து தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் படி , தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் , முதல்வரின் தனிப் பிரிவிற்கு , வேண்டுகோள் மனுவை அனுப்பினார்.

இந்த மனுவை ஏற் றுக் கொண்ட அதிகாரி கள் , கடந்த 2007-2008ம் ஆண்டு முதல் உரிய துறை அனுமதியுடன் , அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பகுதி நேரமாக எம்பில் பட்டம் பெற்றிருந்தால் , உயர்கல்விக்கான இரண்டாவது ஊக்க ஊதியம் பெற தகுதியானவர் என கோவை மண்டல கணக்கு மற்றும் தணிக்கை பொறுப்பு அலுவலருக்கு உத்தர விட்டுள்ளனர். இதனால் , கோவை மண்டலத்தில் 800 ஆசிரியர்கள் மீதான தணிக்கை தடை நீக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ள தாக ஆசிரியர்கள் தெரி வித்தனர்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...