Wednesday, July 29, 2020

பொண்டாட்டி இல்ல; நல்ல சோறு கிடைக்குது!’ - குசும்பு வீடியோ வெளியிட்ட கொரோனா நோயாளிகள்


பொண்டாட்டி இல்ல; நல்ல சோறு கிடைக்குது!’ - குசும்பு வீடியோ வெளியிட்ட கொரோனா நோயாளிகள்

வீடியோவில் பேசிய நபர்

``பொண்டாட்டி தொல்லைக்கு இந்தக் கொரோனாவே மேல். மூணு வேளை நல்ல சாப்பாடு கிடைக்குது. சீரியல் கொடூரம் இல்லை’’ என்று நகைச்சுவை வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள் கொரோனா நோயாளிகள்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா மகளிர் கலைக் கல்லூரியில், கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் கல்லூரியின் மொட்டை மாடியில் இருந்தபடி கொரோனாவைக் கிண்டல் செய்து புதியதாகத் தொற்றுக்குள்ளானவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசி வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் பேசும் நோயாளிகள், ``கொரோனா வந்தவங்களை ஆஸ்பிட்டலுக்கு கூட்டிக்கிட்டுப் போகும்போது சொந்தக்காரங்க யாரும் அழுது புலம்பாதீங்க. எல்லோரும் அண்ணன், தங்கச்சி, அண்ணி உறவு முறையில் இங்க சொந்தம் பந்தமா பழகுறோம்.

கொரோனா நோயாளிகள்

கொரோனாவை கண்டுபிடிச்ச நபருக்கும், தமிழ்நாடு அரசுக்கும், எங்க பனப்பாக்கம் பேரூராட்சிக்கும், எங்களை இங்கு அனுமதிக்க காரணமாக இருந்தவர்களுக்கும் முதல்ல நன்றியை தெரிவிச்சிக்கிறோம். வீட்ல இருந்தா பொண்டாட்டி தொல்லை தாங்க முடியாது. `கருவேப்பிலை இல்ல... கொத்தமல்லி இல்ல... அது இல்ல... இது இல்லைனு கொடுமைப்படுத்துவா.' நைட் 8 மணிக்கு வீட்டுக்குப் போனாகூடச் சாப்பாடு போடாம சீரியல் பார்த்துக்கிட்டு இருப்பா. ஆனா, இங்க டைமுக்கு சோறு கிடைக்குது. முக்கியமா பொண்டாட்டி தொல்லை இல்ல. அதனால ஜாலியா இருக்கோம்.

கொரோனா டெஸ்ட் கொடுத்துட்டோமே... என்ன ஆகுமோனு நினைக்காதீங்க. டெஸ்ட்டுல பாசிட்டிவ் வந்தாலும் பிரச்னை இல்ல. இங்க வாங்க ஜாலியா இருங்க. நோய் குணமான பிறகு சந்தோஷமா வீட்டுக்குப் போங்க. புதுசா வந்த நோயாளி ஒருவர் ரெண்டு நாளா அழுதுகிட்டே இருந்தாரு. அவர்கிட்ட நாங்க பேசுன பிறகு நோய் குணமானாலும் போக மறுத்துட்டாரு. `இன்னும் ரெண்டு நாள் எக்ஸ்டன்ட் பண்ணிக் கொடுங்க’னு வடிவேலு மாதிரி காமெடி பண்ணாரு. கொரோனாவுக்கு ஊசியும் இல்ல; மாத்திரையும் கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தி குறையிதுனு சொல்றாங்க. எதிர்ப்பு சக்திக்காக மாத்திரையும் இதுவரைக்கும் கொடுக்கல.

கொரோனா நோயாளிகள்

ஆனாலும், காலையில எழுந்த உடனே டீ, பிஸ்கட் அப்புறம் பொங்கல், கபசுர கசாயம் கொடுக்கிறாங்க. பிற்பகல் 11 மணி ஆன உடனே சுண்டல் தர்றாங்க. வீட்டுல பொண்டாட்டிகிட்ட சுண்டல் அவுச்சி கொடுடினு கேட்டா, `போங்க வேற பொழப்பு இல்லையா’னு சொல்லுவா. இங்க அருமையா சுண்டல் தர்றாங்க. ஒரு குறையும் இல்ல. மதியம் 1 மணிக்கெல்லாம் சாப்பாடு, சாம்பார், ரசம், மெயினா முட்டை தர்றாங்க. முனியாண்டி விலாஸ்ல கூட முட்டை 10 ரூபாய். ஆனா, இங்க சும்மா கிடைக்குது. யாரெல்லாம் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்படுறீங்களோ, அவங்க எல்லாருமே இங்க வந்து தங்கி நல்லா சாப்பிடுங்க. இந்த நல்ல ஆஃபர் திட்டத்தைப் பயன்படுத்திக்கோங்க. சேர்ந்து பழகுங்க. நன்றி வணக்கம்’’ என்கிறார்கள் கரகோஷமாக.

`உங்களை நீங்களே கலாய்ச்சிகிட்டா... அப்புறம் நாங்க எதுக்கு இருக்கிறோம். தாங்க முடியல குருநாதா’ என்று கதறுகிறார்கள் மீம் கிரியேட்டர்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024