Friday, July 24, 2020

தமிழகத்தில், 'கோவாக்சின்' தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தி சோதனை துவக்கம்


தமிழகத்தில், 'கோவாக்சின்' தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தி சோதனை துவக்கம்

Added : ஜூலை 24, 2020 04:07

சென்னை: கொரோனா தொற்று தடுப்புக்கான, 'கோவாக்சின்' மருந்தை, மனிதர்களுக்கு செலுத்தி, சோதனை செய்யும் பணி, தமிழகத்தில் நேற்று, எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரியில் துவங்கியது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து, ஐதராபாதில் செயல்படும், 'பாரத் பயோடெக்' நிறுவனம், கொரோனாவை தடுக்கும், கோவாக்சின் மருந்தை கண்டறிவதில், இறுதி நிலையை எட்டியுள்ளது.மனிதர்களுக்கு அளித்து பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மருந்து, ஆக., 15க்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இறுதி கட்ட பரிசோதனை நடத்த, பீஹார், ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள, மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுஉள்ளது.

தமிழகத்தில், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரிக்கு அனுமதி தரப்பட்டு உள்ளது. அதன்படி, தடுப்பு மருந்தை பரிசோதிப்பதற்காக, தகுதியான தன்னார்வலர்கள் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு, உடல் ரீதியான மருத்துவப் பரிசோதனைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து, கோவாக்சின் தடுப்பு மருந்து செலுத்தும் பணி, நேற்று துவங்கியுள்ளது.எஸ்.ஆர்.எம்., பல்கலை துணைவேந்தர் ரவிகுமார் அளித்த பேட்டி:இந்தியாவில், எஸ்.ஆர். எம்., மருத்துவமனை உட்பட, 12 மருத்துவ மையங்களில், கோவாக்சின் மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி, பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, கோவாக்சின் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் பணி துவங்கி உள்ளது. தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து ஒத்துழைப்பு தருகின்றனர்.அவர்களுக்கு மருந்து செலுத்தப்பட்ட பின், ஆறு மாதம் வரை கண்காணிக்கப்படுவர். 18 வயதில் இருந்து, 55 வயதிற்கு உட்பட்ட தன்னார்வலர்கள், எந்த நோயும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

மருந்து செலுத்திய மூன்று மாதங்களில், அதன் பயன் தெரிய வரும். மேலும், தன்னார்வலர்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.தடுப்பூசியை சோதனை செய்ய வாய்ப்பு கிடைத்தது, மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மருத்துவமனையில், 50 முதல், 100 பேர் வரை பரிசோதனை மேற்கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024