Thursday, July 23, 2020

அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் விடுப்பு


அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் விடுப்பு

Added : ஜூலை 22, 2020 22:44

திருப்பதி : ஆந்திராவில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு, 14 நாட்கள் விடுப்பு அளித்து, அம்மாநில அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.

ஆந்திராவில், கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பல அரசு ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே, ஆந்திர அரசு, 30 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்தில் பணிபுரிய அனுமதித்துள்ளது. மற்றவர்கள், தங்கள் வீடுகளிலிருந்து பணிபுரிய உத்தரவிடப்பட்டு உள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்ட ஊழியர்களுக்கு, 14 நாட்கள் சிறப்பு விடுப்பு அளித்து, ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024