மருத்துவ படிப்பு ஓ.பி.சி., ஒதுக்கீடு வரும், 27ல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
Added : ஜூலை 17, 2020 23:19
சென்னை : மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக ஒப்படைக்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 50 சதவீத இடங்களை வழங்க கோரிய வழக்கின் உத்தரவை, வரும், 27ம் தேதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு இடங்களில், 15 சதவீதமும், முதுநிலைப் படிப்புகளில், 50 சதவீத இடங்களும், அகில இந்திய ஒதுக்கீடுக்கு ஒப்படைக்கப்படுகின்றன.இந்த இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 50 சதவீத ஒதுக்கீடு வழங்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் தி.மு.க., - அ.தி.மு.க., - ம.தி.மு.க., மற்றும் திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளும், 27 சதவீத ஒதுக்கீடு கோரி, பா.ம.க.,வும் மனுக்கள் தாக்கல் செய்தன.மனுக்கள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தன.
தி.மு.க., சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், அ.தி.மு.க., சார்பில், மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பா.ம.க., சார்பில், வழக்கறிஞர் கே.பாலு உள்ளிட்டோர் ஆஜராகினர். தமிழக அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், மருத்துவ கவுன்சில் சார்பில், வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் ஆஜராகினர்.இவ்வழக்கில், வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிந்த நிலையில், வரும், 27ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக, முதல் பெஞ்ச் அறிவித்தது.
No comments:
Post a Comment