பள்ளி, கல்லுாரிகள் 31 வரை திறப்பில்லை
Added : ஜூலை 07, 2020 23:16
சென்னை : 'வரும், 31ம் தேதி வரை பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறக்க வேண்டாம்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க அமல்படுத்தப்படும் ஊரடங்கால், கல்வி நிறுவனங்களுக்கு மூன்று மாதங்களாக விடுமுறை விடப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும், ஆசிரியர்களும், பணியாளர்களும், குறைந்த அளவில் வரவழைக்கப் படுகின்றனர்.இந்நிலையில், வரும், 31ம் தேதி வரை கல்வி நிறுவனங்களை திறக்க வேண்டாம் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலர், அனிதா கர்வால், மாநில கல்வி துறைகளுக்கு அனுப்பியுள்ள கடிதம்:பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை, 31ம் தேதி வரை திறக்க வேண்டாம். மாணவர்களுக்கு நேரடியாக அல்லாமல், தொலைநிலை வகுப்புகளை தொடர்ந்து நடத்தலாம்.மேலும், உரிய விதிகளை பின்பற்றி, 'ஆன்லைன்' வகுப்புகளையும் நடத்தலாம். ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் அவசிய தேவை ஏற்பட்டால் மட்டும், நேரடியாக கல்வி நிறுவனங்களுக்கு பணிக்கு வரலாம். முடிந்தவரை வீட்டில் இருந்து பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். அவர்களை கல்லுாரிகளுக்கு அழைக்க வேண்டாம். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment