Sunday, July 12, 2020

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! AICTE அதிரடி!


பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! AICTE அதிரடி! 

By Sabarish Updated: Friday, July 10, 2020, 14:31 [IST] 

கொரோனா ஊரடங்கின் காரணமாக அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து, கல்வி நிறுவனங்களை திறக்கமுடியாத சூழல் நிலவி வரும் நிலையில் பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பொறியியல் கல்லூரிகளுக்கான எவ்வித அறிவிப்பும் வெளிவராத நிலையில், தற்போது ஆகஸ்ட் 16ம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகளை திறக்கலாம் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (AICTE) அறிவுறுத்தியுள்ளது. AICTE கூட்டத்தில் முடிவு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (AICTE) 62-வது கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் எப்போது வகுப்புகளை தொடங்கலாம் என ஏற்கனவே தகவல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அந்தத் திட்டத்திற்கு மாற்றாக புதிய அறிவிப்பை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது 

புதிய அறிவிப்பு வருமாறு: ஏஐசிடிஇ-யின் புதிய அறிவிப்பில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்காக அங்கீகாரத்தை ஜூலை 15-ந்தேதிக்குள் வழங்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளது. 

ஆகஸ்ட் 30-க்குள் முடிக்க வேண்டும் 

பொறியியல் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை ஆகஸ்ட் 30-தேதிக்குள் முடிக்க வேண்டும். தொடர்ந்து 2-ம் கட்ட கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை செப்டம்பர் 10-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் காலியாக இருக்கும் இடங்களில் மாணவர் சேர்க்கையைச் செப்டம்பர் 15-ந்தேதிக்குள் முடித்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 16 வகுப்புகள் தொடக்கம் மேலும், ஏற்கனவே பொறியியல் படிப்புகளில் பயின்று வரும் மாணவர்களுக்கான வகுப்புகளை ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்கலாம் (பழைய அட்டவணையில் ஆகஸ்டு 1-ந்தேதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது). புதிதாக பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்குச் செப்டம்பர் 15-ந்தேதி முதல் வகுப்புகளை தொடங்கலாம். கல்வியாண்டு மாற்றம் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் முதுகலை டிப்ளமோ, முதுகலை சான்றிதழ் உள்ளிட்ட படிப்புகளுக்கான வகுப்புகளை ஜூலை 15-ம் தேதி முதல் தொடங்கலாம். இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நடப்பு கல்வியாண்டு என்பது ஆகஸ்டு 1-ந்தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி வரை என மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) தொழில்நுட்ப படிப்புகளுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ள நிலையில், இதில், தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகள் பின்பற்றப்படுமா என மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024