Thursday, July 16, 2020

'ஐந்து பேருக்கு மேல் அனுமதிக்காதீர்'


'ஐந்து பேருக்கு மேல் அனுமதிக்காதீர்'

Added : ஜூலை 16, 2020 00:06

சென்னை : 'வங்கி கிளைகளுக்குள், ஒரே நேரத்தில், ஐந்து நபர்களுக்கு மேல் அனுமதிக்காதீர்கள்' என, சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளதாக, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வங்கி அதிகாரிகள் கூறியதாவது:முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, கிருமி நாசினியால் சுத்தம் செய்தல் போன்ற, விழிப்புணர்வு தகவல்களுடன், பேனர் வைக்கவும், அறிவுறுத்தி உள்ளனர். ஆனால்,வாடிக்கையாளர்கள் சிலர், பின்பற்றுவதே இல்லை. இருந்தாலும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024