வங்கிகள் இன்று முதல் வழக்கம் போல செயல்படும்
Updated : ஜூலை 06, 2020 04:22
சென்னை:சென்னைகாஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு முடிந்ததால் இன்று முதல் மாலை 4:00 மணி வரை வங்கிகள் வழக்கம் போல செயல்படும்.இந்த மாவட்டங்களில் உள்ள வங்கிகள் 4ம் தேதி வரை 33 சதவீத ஊழியர்களுடன் காலை 10:00 முதல் பகல் 2:00 மணி வரை இயங்கின.
பெட்ரோல் நிலையங்கள் காஸ் ஏஜன்சி போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கக் கூடிய வினியோகஸ்தர்கள் மற்றும் டீலர்களிடம் ரொக்கப் பரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. பொது மக்களுக்கு நேரடி வங்கி சேவை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று முதல் வங்கிகள் வழக்கம் போல செயல்பட உள்ளன.வங்கி அதிகாரிகள் கூறுகையில் ''மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 12ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் அந்தப் பகுதிகளில் வங்கிகள் செயல்படும் நேரம் குறித்து மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வங்கி முடிவு செய்யும் என்றனர்.
No comments:
Post a Comment