Monday, December 21, 2020

நடிகை திறந்த நகை கடையில் நஷ்டம் ஒரே குடும்பத்தில் விஷம் குடித்த 5 பேர்


நடிகை திறந்த நகை கடையில் நஷ்டம் ஒரே குடும்பத்தில் விஷம் குடித்த 5 பேர்

Added : டிச 21, 2020 00:10

திருச்சி,: நகை வியாபாரத்தில், 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால், கடை உரிமையாளர், மனைவி, மகள், பெற்றோருடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது, பரபரப்பை ஏற்படுத்தியது.திருப்பூர், தாராபுரம் பெரியகடை வீதியில், எஸ்.வி.ஆர்., என்ற பெயரில் பலராமன், 75, என்பவரும், அவரது மகன் ஹரி, 38, என்பவரும் நகை கடை நடத்தி வருகின்றனர்.

கடையை நடிகை ஓவியா திறந்து வைத்தார்.மிகவும் ஆடம்பரமாக திறக்கப்பட்ட நகைக்கடையில் எதிர்பார்த்த வருமானம் இல்லை. 15 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், நகைச்சீட்டு கட்டியவர்களுக்கு, நகை கொடுக்க முடியாமல் திணறினர்.சீட்டு கட்டி ஏமாந்த மக்கள், கடந்த, 18ம் தேதி இரவு, கடையை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தாராபுரம் போலீசார் விசாரித்து வந்தனர்.அவமானம் அடைந்த ஹரி, பெற்றோர், மனைவி, மகள் ஆகியோருடன், திருச்சி, மண்ணச்சநல்லுார் அருகே துடையூர் என்ற இடத்தில், லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.இவர்களது கார் டிரைவர் அய்யப்பன், தனி அறையில் தங்க, மற்ற அனைவரும் பெரிய அறையில் தங்கி உள்ளனர்.

நேற்று காலை, அவர்கள் தங்கியிருந்த அறைக்கதவு திறக்கவில்லை என்பதால், விடுதி ஊழியர்கள் துணையுடன், கார் டிரைவர் அய்யப்பன் கதவை திறந்து பார்த்தார்.உள்ளே, ஹரி, மனைவி திவ்யா, 34, மகள் அசோக் ராதா, 8, பலராமன், அவரது மனைவி புஷ்பா, 68, ஆகிய ஐந்து பேரும், விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர். திருச்சி கே.எம்.சி., மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Doctor away in court, driver prescribes meds

Doctor away in court, driver prescribes meds  Faiz.Siddiqui@timesofindia.com 18.09.2026 Kanpur: The driver of a doctor allegedly prescribed...