Sunday, December 13, 2020

சென்னை:தாம்பரம் -- நாகர்கோவில் இடையே, வாரத்தில் மூன்று நாட்கள்; மதுரை -- திருவனந்தபுரம் இடையே, தினமும் முன்பதிவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.


13.12.2020

சென்னை:தாம்பரம் -- நாகர்கோவில் இடையே, வாரத்தில் மூன்று நாட்கள்; மதுரை -- திருவனந்தபுரம் இடையே, தினமும் முன்பதிவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

* சென்னை தாம்பரத்தில் இருந்து, ஞாயிறு, திங்கள், புதன் கிழமைகளில் இரவு, 7:25க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 7:30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்

* நாகர்கோவிலில் இருந்து திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மாலை, 4:15க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை, 4:15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த சிறப்பு ரயில், தாம்பரத்தில் இருந்து, 16ம் தேதி; நாகர்கோவிலில் இருந்து வரும், 17ம் தேதி முதல் இயக்கப்படும்.

மற்றொரு ரயில்கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு, தினமும் முன்பதிவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

* திருவனந்தபுரத்தில் இருந்து தினமும் இரவு, 8:30க்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 10:10 மணிக்கு மதுரை சென்றடையும்

* மதுரையில் இருந்து தினமும் மாலை, 4:05க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 5:20 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.இந்த சிறப்பு ரயில், 23ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு துவங்கி விட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024