Sunday, December 13, 2020

சென்னை: பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, நாளை முதல் மெரினா கடற்கரை திறக்கப்பட உள்ளதால்




சென்னை: பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, நாளை முதல் மெரினா கடற்கரை திறக்கப்பட உள்ளதால், முன்னேற்பாடு பணிகளில், போலீசார், மாநகராட்சியினர் தீவிரமாக செயல்பட்டனர்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச் முதல், நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது, சென்னையின் அடையாளமான மெரினா கடற்கரையும் மூடப்பட்டது.அதன்பின், மக்கள் நலன் கருதி, அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், மெரினா கடற்கரையில் மக்களுக்கு, தடை நீடித்தது.தடை மீறியோருக்கு, போலீசார், மாநகராட்சியினர் அபராதம் விதித்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் மெரினாவில் நீடித்த தடையை, அரசு தளர்த்தியது. தொடர்ந்து, நாளை முதல், பொதுமக்கள் அனுமதிக்க பட உள்ளனர்.இதற்கு முன்னேற்பாடாக, நேற்று மாநகராட்சியினர் கடற்கரை மணற்பரப்பு, சர்வீஸ் சாலை மற்றும் அங்குள்ள பொது கழிப்பறைகளை சுத்தப்படுத்தி, தண்ணீர் வசதிகளை ஏற்படுத்தினர்.

போலீசார் கடற்கரையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் வர உள்ள நிலையில், மெரினாவில் தடை தளர்த்தப்பட்டிருப்பது, மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக, பொதுமக்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024