Saturday, July 3, 2021

தானே:மஹாராஷ்டிராவில் உயிருடன் இருக்கும் ஆசிரியரை தொலைபேசியில் அழைத்து அவரது இறப்பு சான்றிதழ் தயாராக இருப்பதாகவும் உடனடியாக வந்து வாங்கி செல்லும் படியும் கூறிய மாநகராட்சி ஊழியர்களின் செயலால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.


03.07.2021 

தானே:மஹாராஷ்டிராவில் உயிருடன் இருக்கும் ஆசிரியரை தொலைபேசியில் அழைத்து அவரது இறப்பு சான்றிதழ் தயாராக இருப்பதாகவும் உடனடியாக வந்து வாங்கி செல்லும் படியும் கூறிய மாநகராட்சி ஊழியர்களின் செயலால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் தேசாய் 55. இவர் மும்பை காட்கோபரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.இவர் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் குணமடைந்து வீடு திரும்பினார்.ஆனால் தானே மாநகராட்சி பதிவேடுகளில் சந்திரசேகர் தேசாய் கொரோனாவால் பலியானதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தானே மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து சந்திரசேகர் தேசாய்க்கு சமீபத்தில் தொலைபேசி அழைப்பு வந்தது.மறுமுனையில் பேசிய அதிகாரி 'சந்திரசேகர் தேசாயின் இறப்பு சான்றிதழ் தயாராக இருக்கிறது. உடனடியாக வந்து வாங்கி கொள்ளுங்கள்' என சந்திரசேகரிடமே தெரிவித்தார்.இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் தான் உயிருடன் இருப்பதாக தெரிவித்தார்.

ஆனால் அந்த அதிகாரியோ அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் 'எங்கள் பதிவேட்டில் அப்படித்தான் உள்ளது' என 'பொறுப்புடன்' பதில் அளித்தார்.இதையடுத்து மாநகராட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்ற சந்திரசேகர் அவர் உயிருடன் இருப்பதை ஆவணங்கள் வாயிலாக நிரூபித்தார். அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் தவறை ஒப்புக் கொண்டனர். 'அந்த பட்டியல் புனேவில் தயாரிக்கப்பட்டது' என தெரிவித்தனர்.

கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உள்ளதா என்பதை விசாரிக்கவும் வீட்டில் வேறு யாருக்கும் தொற்று ஏற்பட்டதா உயிரிழப்புகள் நிகழ்ந்ததா என விசாரிக்க மாநகராட்சி ஊழியர்கள் தொலைபேசியில் அழைப்பது வழக்கம்.அப்படி அழைத்தபோது சந்திரசேகரின் பெயர் இறந்தவர்களின் பட்டியலில் இடம் பெற்று இருந்ததாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கள் தவறுக்கு மன்னிப்பும் கோரினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024