Thursday, July 15, 2021

திருச்சி -- பகத் கி கோதிக்கு எழும்பூர் வழியாக சிறப்பு ரயில்


திருச்சி -- பகத் கி கோதிக்கு எழும்பூர் வழியாக சிறப்பு ரயில்

Added : ஜூலை 15, 2021 00:48

சென்னை:திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக, ராஜஸ்தானின் பகத் கி கோதி நகருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

* பகத் கி கோதியில் இருந்து, வரும் 21ம் தேதி முதல், புதன்கிழமை தோறும் மாலை, 4:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், வெள்ளிக்கிழமை தோறும் மாலை 4:00 மணிக்கு திருச்சி சென்றடையும்

* திருச்சியில் இருந்து, வரும் 24ம் தேதி முதல் சனிக்கிழமைகள் தோறும் காலை 7:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், திங்கள் கிழமை தோறும் காலை 7:45 மணிக்கு பகத் கி கோதிக்கு செல்லும். இந்த ரயில்கள் விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு, இன்று துவங்குகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024