Thursday, July 15, 2021

பயிற்சி டாக்டர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு?

பயிற்சி டாக்டர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு?

Added : ஜூலை 15, 2021 00:55

சென்னை:தமிழகத்தில் பயிற்சி டாக்டர்களுக்கு கூடுதலாக, 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை உயர்த்தப்பட உள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் ராதாகிருஷ்ணனுடன், தமிழக உறைவிட டாக்டர்கள் சங்கத்தினர் பேச்சு நடத்தினர். அப்போது, ஊக்கக் தொகை உயர்வு கோரிக்கையை விரைந்து நிறைவேற்றுவதாக, அவர்களுக்கு அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அச்சங்கத்தின் நிர்வாகி டாக்டர் விக்னேஷ் கூறியதாவது:ஊக்கத் தொகை உயர்வு கோரிக்கை குறித்து, பலமுறை அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். தற்போது, எம்.பி.பி.எஸ்., பயிற்சி டாக்டர்களுக்கு, 21 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அமைச்சரிடம் நடத்திய பேச்சை தொடர்ந்து, 3,000 ரூபாய் கூடுதலாக உயர்த்தப்பட உள்ளது.

அதேபோல், முதுநிலை பயிற்சி டாக்டர்களுக்கு, 38 ஆயிரம் ரூபாயில் இருந்து 48 ஆயிரம் ரூபாயாகவும்; உயர் சிறப்பு முதுநிலை டாக்டர்களுக்கு, 43 ஆயிரம் ரூபாயில் இருந்து 55 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும் என, அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இரண்டு வாரத்தில் இதற்கான அரசாணை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார். அதனால், நாங்கள் இரண்டு நாட்கள் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தோம். தற்போது, அதை ஒத்தி வைத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024