Sunday, August 1, 2021

'ஓய்வூதிய பணப்பலன்களை பத்திரங்களாக ஏற்க முடியாது'

'ஓய்வூதிய பணப்பலன்களை பத்திரங்களாக ஏற்க முடியாது'

Added : ஆக 01, 2021 02:49

மதுரை,-''ஓய்வூதிய பணப்பலன்களை பத்திரங்களாக அரசு வழங்குவதை ஏற்க முடியாது,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் குமார் தெரிவித்தார்.

மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: அரசு பணியாளர்களின் ஓய்வு வயது மீண்டும் 58 ஆக குறைக்கப்படும் என்றும், 60 அல்லது பணிக்காலம் 33 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்படும் என்றும் சில நாட்களாக செய்திகள் வெளியாகின்றன. கலக்கம்ஓய்வூதிய பணப்பலன்கள் உடனடியாக வழங்கப்படாது எனவும், பத்திரங்களாக தவணை முறையில் அளிக்கப்படும் எனவும் வெளியாகும் தகவல்கள், ஓய்வு வயதை எட்டியுள்ளவர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.மாநிலத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 25 ஆயிரம் பணியாளர்கள் ஓய்வு பெறுகின்றனர். ஓய்வின் போது கிடைக்கும் பணப்பலன்களை வைத்து குழந்தைகள் திருமணம் உள்ளிட்ட செலவுகளை மேற்கொள்கின்றனர். எனவே, முதல்வர் ஸ்டாலின் இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.ஓய்வு வயதை நிர்ணயிக்கும் அரசின் கொள்கை முடிவுகள் எதுவாயினும் ஏற்புடையதே. ஆனால், ஓய்வூதிய பணப்பலன்களை ஓய்வின் போதே முழுமையாக வழங்காமல் பத்திரங்களாக வழங்குவதை ஏற்க முடியாது. பணி வரன்முறைமறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பணியாளர்களுக்கு ஆதரவாக இருந்தார். எனவே, முதல்வர் ஸ்டாலின் பணியாளர்கள் நலன் காக்க வேண்டும்.பழைய ஓய்வூதியம் குறித்த தேர்தல் வாக்குறுதியை, வரும் சட்டசபை கூட்ட தொடரில் அறிவிக்க வேண்டும். தற்காலிக, ஒப்பந்த பணியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024