Saturday, September 22, 2018

தேசிய செய்திகள்

4.5 லட்சம் பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய ஆவணத்தை உள்ளடக்கிய இணையதளம் தொடக்கம்




4.5 லட்சம் பாலியல் குற்றவாளிகள் மற்றும் அவர்கள் புகைப்படங்கள் அடங்கிய தேசிய ஆவணத்தை உள்ளடக்கிய இணையதளம் தொடங்கப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 21, 2018 11:31 AM
புதுடெல்லி

மத்திய அரசு முதல் முறையாக பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய ஆவணத்தை உள்ளடக்கிய இணையதளத்தை ( என்டிஎஸ்ஓ) வெளியிட்டு உள்ளது. இதில் 4.5 லட்சம் தண்டனை பெற்றவர்கள் உள்ளனர். மேலும் இதில் 3.5 லட்சம் பேரின் புகைப்படம் இடம் பெற்று உள்ளது.

இதில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள், கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஈவ் டீசிங் குற்றத்தில் ஈடுபட்டு தண்டனை பெற்ற குற்றவாளிகளின் பெயர் விவரங்கள் இடம் பெற்று உள்ளன.

இந்த ஆவணங்களை உள்துறை அமைச்சகம் (எம்எச்ஏ) பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்துடன்( டபிள்யூசிடி) இணைந்து தேசிய குற்றப்பதிவு ஆணையமும்( என்சிஆர்பி) பராமரிக்கும்.

பாலியல் குற்ற வழக்குகளை கண்காணித்து, விசாரணை செய்வதற்கு, சட்ட அமலாக்க முகவர் நிறுவனங்களுக்கு இந்த ஆவணங்கள்(என்டிஎஸ்ஓ) உதவும்.

ஏப்ரல் 2018 ல் அமைச்சரவை ஒப்புதல் அளித்த இந்த ஆவணம் உலகில் ஒன்பதாவது நாடாக இந்தியா பாலியல் குற்றவாளிகளின் தேசிய ஆவணத்தை (என்டிஎஸ்ஓ) அமைப்பதற்கும் பராமரிக்க உள்ளது.

மத்திய உள்துறை தகவல் படி மாநில போலீஸ் 2005 ஆம் ஆண்டு முதல் இந்த ஆவணத்தை தொடர்ந்து புதுப்பிக்கும்படி கோரப்பட்டு உள்ளது. ஆவணத்தில் ஒவ்வொருவருக்கும் பெயர், முகவரி, புகைப்படம் மற்றும் கைரேகை விவரங்கள் உள்ளன. எனினும், ஆவணமானது எந்த நபரின் தனியுரிமையையும் சமரசம் செய்யாது.

மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே சைபர் கிரைம் விசாரணையை வலுப்படுத்தவும், போலீஸ் அதிகாரிகள், பொது வக்கீல்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் ஆகியோரின் திறன்களை மேம்படுத்துவதற்காக பயிற்சி திட்டங்களை நடத்தவும் சைபர் பார்ன்சிக்-கம்-பயிற்சி ஆய்வகங்களை நிறுவுவதற்காக மாநிலங்களுக்கு / யூனியன் பிரேதேசங்களுக்கு 94.5 கோடி ரூபாய் வழங்கி உள்ளது

பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்தின் தகவல் படி, ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சமூகத்திற்கு ஒரு தீவிர ஆபத்தை ஏற்படுத்த கூடிய பாலியல் குற்றவாளிகள் குற்றம்சார்ந்த வரலாற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுவார்கள் என கூறினார்.

மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறும் போது, நான் மூன்று வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முன் முயற்சிகளாகும். இது பெரும் பெருமையும் மகிழ்ச்சியும் கொண்டது. பாலியல் குற்றவாளிகள் மற்றும் சைபர்கிரைம் புகாரளிப்பு வலைதளத்தை தேசியமயமாக்குதல் எங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக எங்கள் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட மற்றொரு நடவடிக்கை ஆகும். என அவர் கூறினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான சைபர் குற்ற தடுப்புச் சட்டம் (சிசிபிடபிள்யூசி) எனும் மற்றொரு வலைப்பக்கமும், தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் வழக்குகளைப் பற்றி புகார் தெரிவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களைச் சரிபார்க்க பல நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. கடுமையான தண்டனையை வழங்குவதற்கும், நவீன தடயவியல் வசதிகளை உருவாக்குவதற்கும், விசாரணைகளை மேம்படுத்துவதற்கும், MHA வில் பெண்களின் பாதுகாப்புப் பிரிவை உருவாக்கும் என மந்திரி ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.

இதன் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள புகார்கள், சம்பந்தப்பட்ட மாநில / யூனியன் பிரதேசங்களின் போலீஸ் அதிகாரிகளால் கையாளப்படும் மற்றும் மாநில போலீஸ் விசாரணையில் உதவுவதற்கு ஆட்சேபிக்கத்தக்க உள்ளடக்கம் மற்றும் URL ஐயும் பதிவேற்ற முடியும்.

பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய ஆவணத்தை உள்ளடக்கிய இணையதள தொடக்க விழா, டில்லியில் நடந்தது, இந்த நிகழ்ச்சியில், இணையதளத்தை மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங் தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் மத்திய பெண் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, மேனகா பேசியதாவது:-

நாட்டில் நடக்கும், 30 சதவீத பாலியல் குற்றங்கள், பெண்கள் காப்பகத்தில் தான் நடக்கின்றன. எனவே, இந்த குற்றங்களை கண்காணித்து, குற்றவாளிகள் மீது, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...