விற்பனைக்கு வந்தது 6ஜி.பி ரேம் கொண்ட மோட்டோ ஜி6 பிளஸ் !!!
டர்போ பவர் அடாப்டர் மூலம் 7 மணி நேரத்துக்கான சார்ஜை 15 நிமிடங்களில் ஏற்றலாம்.
மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்ஃபோன் இந்தியாவில் அறிமுகமானது. ஜி6 மற்றும் ஜி6 பிளே மொபைகளின் தொடர்ச்சியாக ஜி6 பிளஸ் வெளியாகியுள்ளது. ஜி6 சீரிஸில் இந்த ஸ்மார்ட்ஃபோனுக்கு பெரிய டிஸ்பிளேவும், அதிக வேகமான பிராசஸரும் இருக்கிறது.
மோட்டோ ஜி6 பிளஸ் விலை:
6ஜி.பி ரேம்/ 64ஜி.பி மெமரி கொண்ட ஜி6 பிளஸின் விலை 22,499 ரூபாய். அமேசான், மோட்டோ ஹப்ஸ் மற்றும் மோட்டோவின் ஆஃப்லைன் விற்பனை நிலையங்களில் இன்று முதல் கிடைக்கும். இண்டிகோ கருப்பு நிறுத்தில் மட்டும் தான் விற்பனைக்கு கிடைக்கும். பேடிஎம் மால் ஆப்பில் வாங்குபவர்களுக்கு 3000 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கிறது.
ஜி6 பிளஸ் ஸ்மார்ட்ஃபோனின் சிறப்பம்சங்கள்:
இரண்டு நானோ சிம் ஸ்லாட்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோன், ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அவுட் ஆஃப் தி பாக்ஸ் இயங்குதளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பை அப்டேட் பின்னர் கொடுக்கப்படும். 5.93 இன்ச், 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ தொடு திரை கொண்டது. ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர் இடம் பெற்றுள்ளது. 6 ஜி.பி ரேம், வேகம் சேர்க்கிறது. 64 ஜி.பி ஃபோன் மெமரியும், எஸ்.டி கார்டு மூலம் 128 ஜி.பி அளவுக்கு ஸ்டோரேஜை நீட்டித்துக் கொள்ளவும் முடியும். எஸ்.டி கார்டுக்கென தனி ஸ்லாட் உள்ளது.
பின் பக்கத்தில், 12 மெகா பிக்சல் பிரைமரி சென்சாரும், 5 மெகா பிக்சல் செகண்டரி சென்சாரும் கொண்ட டூயல் கேமராவும் உள்ளது. முன் பக்கத்தில் 8 மெகா பிக்சல் சென்சார் கொண்ட செல்ஃபி கேமராவும் இருக்கிறது. டூயல் டோன், டூயல் லென்ஸ் எல்.இ.டி ஃபிளாஷ் பின் பக்கத்திலும், முன்பக்கம் செல்ஃபி ஃபிளாஷும் உள்ளது.
நெட்வொர்க் தொடர்பை பொறுத்தவரை 4ஜி எல்.டி.இ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.0, மைக்ரோ யூ.எஸ்.பி டைப் சி, ஜி.பி.எஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கும் இதில் உள்ளது. 3200mAh பேட்டரி கொண்டது. டர்போ பவர் அடாப்டர் மூலம் 7 மணி நேரத்துக்கான சார்ஜை 15 நிமிடங்களில் ஏற்றலாம். இதன் எடை165 கிராம்.
No comments:
Post a Comment