Friday, September 21, 2018

விமானத்தில் பறக்க ஊழியர்களுக்கு சலுகை

Added : செப் 20, 2018 19:56


புதுடில்லி:மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுமுறை கால பயணச்சலுகை கட்டணத்தில், ஜம்மு - காஷ்மீர், அந்தமான் தீவுகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு, விமானத்தில் சென்று வர, இரண்டு ஆண்டுகளுக்கு சலுகை நீட்டிக்கப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும், 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கு, எல்.டி.சி., எனப்படும், விடுமுறை கால பயணச்சலுகை கட்டணம் வழங்கப்பட்டு வருகிறது.இதன்படி, அவர்கள் வசம் உள்ள, சம்பளத்துடன் கூடிய விடுமுறை தினத்தை ஒப்படைத்து, அவர்கள், குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளலாம். இதற்கான பயணச் செலவை, அரசு ஏற்கும்.இந்த திட்டத்தில், 2014ல், புதிய சலுகை அறிவிக்கப்பட்டது. அதன்படி, வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு - காஷ்மீர் மற்றும் அந்தமான் தீவுகளுக்கு சென்று வர, விமான கட்டணம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.இந்த சலுகை, 2018 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த மாதத்துடன், இந்த சலுகை முடிவடையும் நிலையில், அதை மேலும் இரண்டு ஆண்டு களுக்கு நீட்டித்து, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.விடுமுறை கால பயணச்சலுகை கட்டணத்தில் மோசடி செய்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024