Saturday, September 22, 2018

தமிழ் பேசுவோர் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரிப்பு

Added : செப் 22, 2018 05:45

புதுடில்லி: அமெரிக்காவில், தெலுங்கு மொழி பேசுவோர் எண்ணிக்கை,86 சதவீதமும், தமிழ் பேசுவோர் எண்ணிக்கை, 55 சதவீதமும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.அமெரிக்காவில், 2017க்கான மக்கள் தொகை விபரம், சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், அவர்களின் தாய் மொழி ஆகிய தகவலும் இடம் பெற்றுள்ளது.இதன்படி, 2010ல், வெளியிடப்பட்ட மக்கள் தொகை பட்டியலுடன் ஒப்பிடுகையில், 2017ல், தெலுங்கு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தெலுங்கு பேசுவோர் எண்ணிக்கை, கடந்த ஏழு ஆண்டுகளில், 86 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, வங்க மொழி பேசுவோர், 57 சதவீதமும், தமிழ் பேசுவோர், 55 சதவீதமும் அதிகரித்துள்ளனர்.ஹிந்தி பேசுவோர், 42 சதவீதமும், குஜராத்தி பேசுவோர், 23 சதவீதமும் அதிகரித்துள்ளனர்.அமெரிக்க மக்கள் தொகை, 30.6 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. 

இதில், வீட்டில், ஆங்கிலம் அல்லாத மொழிகளை பேசும், 5 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை, 21.8 சதவீதமாக உள்ளது.இந்திய மொழிகளில், ஹிந்தி பேசுவோர் எண்ணிக்கை தான், தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில், 8.83 லட்சம் பேர், ஹிந்தி பேசுகின்றனர்.இதற்கு அடுத்தபடியாக, 4.34 லட்சம் பேர், குஜராத்தியும், 4.15 லட்சம் பேர், தெலுங்கும் பேசுகின்றனர். தமிழ் மொழியை, 1.48 லட்சம் பேர் பேசுகின்றனர்.அமெரிக்க மக்கள் தொகையில், 26.10.லட்சம் பேர், இந்தியாவில் பிறந்து, அங்கு குடியேறியவர்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024