தள்ளாத வயதிலும் மன உறுதியுடன் வாதாடிய கே.பராசரன்
Added : நவ 10, 2019 07:05
புதுடில்லி: அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான வழக்கை தினமும் விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த 40 நாட்கள் விசாரணை நடத்தி நேற்று (09.11.2019) பரபரப்பு தீர்ப்பு வெளியிட்டது.
இந்த 40 நாட்களில் நடந்த விசாரணையின் போது வாதாடி வந்த 92 வயது தமிழக மூத்த வழக்கறிஞர் பராசரனிடம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “உங்கள் வயதுக்கு மதிப்பளித்துச் சொல்கிறேன். ஒரு நாற்காலி போடச் சொல்கிறேன். அமர்ந்து வாதங்களைச் சொல்லுங்கள்” என்றார். அதற்கு, “வக்கீல் நின்று வாதிடுவதுதான் முறை. நிற்க இயலாது போனால் நீதிமன்றம் வருவதை நிறுத்திக் கொள்வேன்” என மன உறுதியுடன் 92 வயதிலும் நின்றுகொண்டே வாதாடினார் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.பராசரன்.

No comments:
Post a Comment