Sunday, November 10, 2019

அறைகள் வாடகை திருமலையில் உயர்வு

Added : நவ 10, 2019 02:14

திருப்பதி:திருமலையில், தேவஸ்தானத்திற்கு சொந்தமான அறைகளின் வாடகை, இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

திருமலையில், ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்காக, தேவஸ்தானம், 7,000 வாடகை அறைகளை கட்டியுள்ளது. இதில், இலவச அறைகள் முதல், 50 ரூபாயிலிருந்து, 12 ஆயிரம் ரூபாய் வரையிலான வாடகை அறைகளும் உண்டு. இவற்றை, பக்தர்கள் நேரடியாகவும், 'ஆன்லைன்' முன்பதிவு மூலமும் பெற்று வருகின்றனர்.இந்நிலையில், நந்தகம் வளாகத்தில் உள்ள அறைகளின் வாடகையை, தேவஸ்தானம், 600 ரூபாயிலிருந்து, 1000 ரூபாயாக உயர்த்தியுள்ளது.கெளஸ்துபம், பாஞ்சன்யம் வளாகத்தில் உள்ள ஓய்வறைகளின் வாடகை, 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வாடகை உயர்வு, நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது.தேவஸ்தானம், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், அறைகளின் வாடகையை உயர்த்திஉள்ளதால், திருமலைக்கு வரும் பக்தர்கள், சிரமப்பட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024