Monday, November 4, 2019

நாய் பாசம் இருக்கலாம் அதுக்கு இப்படியா? பெற்றோர் திட்டியதால் இளம்பெண் தற்கொலை

தற்கொலை செய்துக் கொள்வதால் என்னை மன்னித்து விடுங்கள்

November 02, 2019 11:24:34 am

kovai young girl suicide : தாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம் தற்கொலை வரை சென்றுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? கோவையில் நாய் வளர்க்க கூடாது என்று பெற்றோர்கள் திட்டியதால் இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது செல்லமகள் கவிதா தனியார் பத்திர அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். கவிதாவுக்கு நாய்கள் என்றால் கொள்ளை பிரியம். நாய்களை வளர்ப்பு, பாசத்தை கொட்டுவது, சாப்பாடு ஊட்டுவது என அநியாத்திற்கு பெட் லவ்வராக இருந்திருக்கிறார். இந்த அன்பு கடைசியில் விபரீதத்தில் முடிந்துள்ளது.

கவிதா கடந்த 2 வருடமாக தனது வீட்டில் சீசர் என்ற நாயை வளர்த்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சீசர் பயந்து வீட்டு வாசலில் பயங்கரமாக சத்தம் போட்டுள்ளது. இதனால் கடுப்பான கவிதாவின் பெற்றோர்கள் அக்கம் பக்கத்தினர் சீசர் இரவு நேரத்தில் தொந்தரவு செய்வதாக சத்தம் போடுகிறார்கள். இனிமேல் சீசர் வேண்டாம் எங்கயாவது கொண்டு போய் விடலாம் என்று கவிதாவிடம் கூறியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த கவிதாவை லேசாக திட்டியுள்ளனர்.

இதனால் மனம் உடைந்த கவிதா வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். தற்கொலை செய்துகொள்ளும் முன் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் அப்பா, அம்மா, பாட்டி மற்றும் தனது தம்பியிடம் சீசரை நன்றாக பார்த்துக்கொள்ளும் படி எழுதியுள்ளார். கவிதாவின் இந்த தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லை தற்கொலை செய்துக் கொள்வதால் என்னை மன்னித்து விடுங்கள் என்றும் கவிதா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கவிதாவின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வளர்ப்பு நாயை பிரிய மனமில்லாமல் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் விவாத பொருளாகவும் மாறியுள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து கவிதாவின் பெற்றோர்கள் இப்போது வரை வெளிவரவில்லை.

No comments:

Post a Comment

Holiday calling: Daily direct flights to Bangkok now

Holiday calling: Daily direct flights to Bangkok now Arvind.Chauhan@timesofindia.com 05.01.2025 Lucknow : To cater to the increasing rush fo...