Sunday, February 16, 2020

உடைகள் வாடகைக்கு... இப்படியும் ஒரு 'ஸ்டார்ட்அப்' வந்திருக்கு!-

Added : பிப் 16, 2020 00:52






திருமணத்தன்று ஒரு முறை அணிவதற்காக உடைகளை மிகவும் அதிகம் பணம் கொடுத்து வாங்கப்படுகிறது. இவை, 10 ஆயிரம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ளதாக இருக்கும்.

அவ்வளவு பணம் கொடுத்து, ஒருமுறை அணிந்த பின், அதை என்ன செய்வதென்று தெரியாமல் நன்றாக 'பேக்' செய்து பீரோவில் வைத்து பூட்டி விடுவோம். இதேபோல், திருமணம், வரவேற்பு, மெஹந்தி நிகழ்ச்சி ஆகியனவும் அப்படித்தான்.

பலருக்கு பல நேரங்களில், ஒரு முறை அணிந்த உடைகளை அணிவது பிடிக்காது. ஒவ்வொரு முறையும் வித்தியாசமான புதிய உடைகளை அணிவது பிடிக்கும். இந்த விஷயத்தில்ல பலருக்கு உதவ ஒரு 'ஸ்டார்ட் அப்' உதயமாகியுள்ளது. 'ப்ளைரோப்' (FLYROBE) என்ற இணையதளம் வித்தியாசமான, இந்த விஷயத்தை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.லெகேங்கா, ஷெர்வானி, கோட், கவுன், சேலை, குர்தா, அனார்கலி போன்றவை புடவை கலெக்ஷன்களையும், இந்த கம்பெனி மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.

இதுதவிர இந்தியாவின் புகழ்பெற்ற 'டிசைனர்கள்' வடிவமைத்த உடைகளையும் வாடகைக்கு என்று காட்சிப்படுத்துகின்றனர். தேவைப்படும் உடைகளை, நான்கு முதல் எட்டு நாட்கள் வரை வாடகைக்கு கொடுக்கின்றனர். ஒருமுறை உபயோகப்படுத்திய உடைகளை, இந்நிறுவனம் மூலம் நீங்களும் வாடகைக்கு விடலாம். இணையதளம்: https://flyrobe.com.

கைமாறும் சீன ஏற்றுமதி

கொரோனா வைரஸ் தந்த பாதிப்பால் உலகில் பல நாடுகள் தங்களுடைய இறக்குமதிக்கு தற்போது இந்தியாவை எதிர்நோக்கி உள்ளன. குறிப்பாக, செராமிக், வீட்டு உபயோகப்பொருள், பேஷன் மற்றும் லைப் ஸ்டைல் பொருட்கள், டெக்ஸ்டைல்ஸ், இன்ஜினியரிங்கபொருட்கள், பர்னிச்சர் ஆகியவற்றை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய ஆரம்பித்திருக்கின்றன.ஆனால் நமக்கு இருக்கும் ஒரு பிரச்னை என்னவென்றால் நமது பெரும்பாலான தயாரிப்புகளுக்கு பல உதிரி பாகங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து வருகிறோம். அவை தற்போது கிடைக்காததால், தயாரிப்பிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த வாய்ப்பை நாம் சரிவர பயன்படுத்திக் கொண்டால் நீண்டகால அடிப்படையில் நமக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் கிடைக்கும். சந்தேகங்களுக்கு: sethuraman.sathappan@gmail.com, 98204-51259, www.startupbusinessnews.com

---- சேதுராமன் சாத்தப்பன் --

No comments:

Post a Comment

NEWS TODAY 31.12.2024