பூந்தமல்லி துணிக்கடை ஊழியர்கள் 46 பேருக்கு கரோனா பாதிப்பு
பூந்தமல்லி 17.07.2020
பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே பிரபல துணிக்கடை செயல்பட்டு வருகிறது. எதிரெதிரே 2 கடைகளாக செயல்படும் இந்த துணிக்கடையில் 110 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 10-ம்தேதி துணிக்கடை ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, துணிக்கடையில் பணிபுரியும் அனைவருக்கும் கடந்த 13-ம் தேதி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைத்தன. அதில், துணிக்கடை ஊழியர்கள் 45 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
ஆகவே, அந்த 45 பேரும், பூந்தமல்லியில் பொது சுகாதார நிறுவனத்தில் உள்ள சிறப்பு முகாமில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து, பூந்தமல்லி நகராட்சி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துணிக்கடையை மூடி, கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமல்லாமல், இந்த கடைக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்களின் பட்டியலை சுகாதார துறையினர் தயார் செய்து அவர்களை தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தினர்.
No comments:
Post a Comment