பக்தர்கள் இல்லை... படையெடுக்கும் குரங்குகள்
Added : ஜூலை 19, 2020 03:43
சபரிமலை : பக்தர்கள் இல்லாமல் பூஜைகள் நடைபெறும் சபரிமலை சன்னிதானத்தில் குரங்குகள் படையெடுக்க தொடங்கியுள்ளன.
கொரோனா ஊரடங்கால் மாசி மாத பூஜைகளுக்கு பின் சன்னிதானத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. குறைவான ஊழியர்களுடன் பூஜை சடங்குகள் மட்டும் நடைபெறுகிறது. தற்போது ஆடி மாத பூஜைகள் நடைபெற்று வருகிறது. நாளை (ஜூலை 20) இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும்.ஆடிமாத பூஜையையொட்டி மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் பகவதிசேவை பூஜை செய்தார்.எப்போதும் சரண கோஷம் முழங்கும் சபரிமலை தற்போது நிசப்தமாக இருக்கிறது. பொதுவாக சன்னிதானத்துக்கு குரங்குகள் வருவது இல்லை. பக்தர்கள் இல்லாததால் உணவு தேடி குரங்குகள் 18 படிகள், கொடிமரம் பக்கத்தில் உள்ள பீடங்களில் வந்து அமர்கின்றன.
No comments:
Post a Comment