Thursday, July 23, 2020

தேர்வு எப்படி நடத்துவீர்கள்? யு.ஜி.சி.,க்கு டில்லி ஐகோர்ட் கேள்வி!


தேர்வு எப்படி நடத்துவீர்கள்? யு.ஜி.சி.,க்கு டில்லி ஐகோர்ட் கேள்வி!

Updated : ஜூலை 23, 2020 02:00 | Added : ஜூலை 23, 2020 01:59

புதுடில்லி, 'பட்டப் படிப்பு இறுதி செமஸ்டர் தேர்வு எந்த முறையில் நடத்தப்படும்' என, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழுவிடம், டில்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பிஉள்ளது. பட்டப் படிப்பு இறுதி செமஸ்டருக்கான தேர்வுகள் நடத்தும் டில்லி பல்கலையின் உத்தரவை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில், பலர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ''தேர்வை எந்த முறையில் நடத்த உள்ளீர்கள்.''திறனறி சோதனை முறையிலா, கல்லுாரிகளின் உள்மதிப்பீட்டு முறையிலா?'' என, உயர் நீதிமன்ற நீதிபதி பிரதிபா சிங் கேள்வி எழுப்பினார்.

'கல்லுாரிகளின் உள்மதிப்பீடு அடிப்படையில் நடத்தினால், தேர்வு மீதான நம்பகத்தன்மை குறைந்துவிடும்' என, யு.ஜி.சி., சார்பில் தெரிவிக்கப்பட்டது.வழக்கின் விசாரணை, நாளைய தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024