மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: அரசிதழில் வெளியீடு
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்த அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மதுரையில் ஜப்பான் கூட்டுறவு நிதி நிறுவனம் (ஜைக்கா) உதவியுடன் தோப்பூரில் 263 ஏக்கரில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. இதற்கான அரசாணையை அரசிதழில் வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கு ரூ.1,264 கோடி நிதியை மத்திய அரசு, ஜப்பான் நாட்டு நிதி நிறுவனத்திடம் (ஜிக்கா) இருந்து கடனாக பெற்று மருத்துவமனை கட்ட உள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜப்பான் நாட்டு நிதிக் குழுவினா் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை நேரில் வந்து பாா்வையிட்டுச் சென்ற நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் ஆய்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamani
No comments:
Post a Comment