இரவு நேர விமான சேவை தூத்துக்குடியில் துவங்கியது
தூத்துக்குடி:துாத்துக்குடியில் இன்று முதல் இரவு நேர விமான சேவை துவங்கியது.துாத்துக்குடி, வாகைகுளம் விமானநிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூருவிற்கு இதுவரையிலும் பகல் நேர விமானங்கள் இயக்கப்பட்டன. அண்மையில் 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூ 380கோடி மதிப்பில் விரிவாக்கப்பணிகள் நடந்தது. இரவு நேர சேவைக்காக ஓடுதளம் விரிவாக்கப்பட்டு, மின்விளக்குகள் அமைக்கும் பணி நடந்தது.இன்று முதல் இரவு விமான சேவை துவக்கப்பட்டது. விமானநிலைய இயக்குநர் சுப்பிரமணியன் கூறுகையில், இரவு நேர விமானத்தை இயக்க இண்டிகோ நிறுவனம் முன்வந்தது. சென்னையிலிருந்து 42 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் மாலை 6.23 மணிக்கு தூத்துக்குடி வந்தது. இரவு 7 மணிக்கு 31 பயணிகளுடன் மீண்டும் சென்னை புறப்பட்டு சென்றது. இரவு சேவை மூலம் தென்மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள் என்றார்.
Dailyhunt
No comments:
Post a Comment