திருவள்ளுவர் பல்கலையை மூடிய, 'கொரோனா'
Added : ஜூலை 03, 2020 23:19
வேலுார்; துணை பதிவாளருக்கு கொரோனா உறுதியானதால், வேலுார் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மூடப்பட்டது.
வேலுார் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை பதிவாளருக்கு, நேற்று கொரோனா தொற்று உறுதி யானது. அவர், வேலுார், சி.எம்.சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.பல்கலை பதிவாளர், சையத் ஷபி கூறியதாவது:துணை பதிவாளருக்கு கொரோனா உறுதியானதால், வரும், 17ம் தேதி வரை, பல்கலை மூடப்படுகிறது. இங்கு பணியாற்றி வரும் ஆசிரியர், ஊழியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், வீட்டிலிருந்தபடியே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களும் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment