Tuesday, March 16, 2021

காஞ்சியில் கண்காணிப்பு குழுவினர் சோதனை: 78 பட்டுச் சேலைகள் பறிமுதல்

காஞ்சியில் கண்காணிப்பு குழுவினர் சோதனை: 78 பட்டுச் சேலைகள் பறிமுதல்

sarees

காஞ்சிபுரத்தில் நிலையான கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனையில் 78 பட்டுச் சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் வட்டாட்சியர் கோமதி தலைமையில் நிலையான கண்காணிப்புக் குழுவினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற கார் ஒன்றை சோதனையிட்டனர்.

அந்தச் சோதனையின்போது அந்தக் காரில் 78 பட்டுச் சேலைகள் இருந்தன. அந்த பட்டுச் சேலைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம். இதைத் தொடர்ந்து இந்தப் பட்டுச் சேலைகளை பறிமுதல் செய்த கண்காணிப்புக் குழுவினர், காரில் இருந்தவர்களை உரிய ஆவணங்களை கொடுத்துவிட்டு பெற்றுச் செல்லும்படி அறிவுறுத்தினர்.

பட்டு வியாபாரிகள் அதிர்ச்சி

காஞ்சிபுரம் பட்டு தென்னிந்தியாவில் புகழ் பெற்ற பட்டு ஆகும். இங்கு வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பட்டுச் சேலைகளை வாங்கிச் செல்கின்றனர். சிலர் வியாபாரத்துக்காகவும் மொத்தமாக பட்டுச் சேலைகளை வாங்கிச் செல்கின்றனர்.

இவ்வாறு வாங்கிச் செல்லும் பட்டுச் சேலைகள் பறிமுதல் செய்யப்படுமோ என்ற அச்சம், பட்டு வியாபாரிகள் பலருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டு விற்பனையில் சரிவு ஏற்படலாம் என்றும் பலர் அச்சம் தெரிவித்தனர். பட்டுச் சேலைகளை வாங்கிச் செல்பவர்கள் உரிய ஆவணங்களை உடன் எடுத்துச் செல்வது நல்லது என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024