Tuesday, March 16, 2021

ஷீரடிக்கு ஆன்மிக சுற்றுலா ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு

ஷீரடிக்கு ஆன்மிக சுற்றுலா ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு

Added : மார் 15, 2021 23:33

சென்னை : இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில் ஷீரடிக்கு, விமான சுற்றுலா அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் இருந்து, மஹாராஷ்டிரா மாநிலம், ஷீரடிக்கு, ஏப்., 4 மற்றும் மே, 8ம் தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, இரண்டு நாள் சுற்றுலாவுக்கு, நபருக்கு, 11 ஆயிரத்து, 900 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.விமான டிக்கெட், நட்சத்திர ஓட்டலில் தங்கும் வசதி, உணவு, உள்ளூர் போக்குவரத்து செலவுகள், கட்டணத்தில் அடங்கும்.மேலும் தகவலுக்கு, சென்னை அலுவலகம் - 90031 40682; திருச்சி - 82879 31974; மதுரை - 82879 31977 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். www.irctctourism.com என்ற இணையதள முகவரியிலும் அறியலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024