Tuesday, March 16, 2021

நர்சிங் படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வு அறிவிப்பு: சட்டப்பேரவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? :

நர்சிங் படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வு அறிவிப்பு: சட்டப்பேரவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? :

election-2021

நர்சிங் படிப்புக்கும் ‘நீட்’ தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு பேரவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா,ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதிமற்றும் கால்நடை மருத்துவம்ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான (2021-22) ‘நீட்’ தேர்வுஆகஸ்ட் 1-ம் தேதி நடக்க உள்ளது. அதில், இந்த ஆண்டு முதல்பிஎஸ்சி நர்சிங் படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பெற்றோர், மாணவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது சட்டப்பேரவை தேர்தலில் தாக்கத்தைஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:

‘நீட்’ தேர்வுக்குப் பின் மருத்துவப் படிப்புகளில் மிகவும் குறைந்த அளவிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கே சேர்க்கை கிடைத்தது. மேலும், ‘நீட்’ தேர்வின் கடினத் தன்மையால் தேர்ச்சி பெறமுடியாத சில மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.

அரசின் இலவச பயிற்சி வகுப்புகளும் பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை. இத்தகைய சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பரவலான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இது கடந்த மக்களவைத் தேர்தலிலும் எதிரொலித்தது.

இவற்றைக் கருத்தில் கொண்டுதான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை தமிழக அரசுஅமல்படுத்தியது.

இந்நிலையில் இந்த ஆண்டு முதல் நர்சிங் படிப்புகளுக்கும் ‘நீட்’தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு சிக்கலை உருவாக்கியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகத்தில் உள்ள 7.5 சதவீத இடஒதுக்கீடு பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு பொருந்தாது என்பதால் பெற்றோர், மாணவர்கள் தரப்பில் மீண்டும் அதிருப்தி நிலவுகிறது.

இதுதொடர்பாக பெற்றோர்கள் சிலர் கூறும்போது, ‘‘கரோனா நிலையை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு மட்டும் ‘நீட்’ தேர்வை திரும்பப் பெற்று, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தமிழக அரசு சேர்க்கை நடத்த வேண்டும். இல்லாவிட்டால், கால்நடை, நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க முன்வரவேண்டும். இல்லாவிட்டால் தேர்தலில் இது தாக்கத்தை ஏற்படுத்தும்’’ என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024