Saturday, March 6, 2021

பட்டா மாறுதலுக்கு சிறப்பு ஏற்பாடு

பட்டா மாறுதலுக்கு சிறப்பு ஏற்பாடு

Added : மார் 05, 2021 23:57

சென்னை:தமிழகத்தில் சொத்து விற்பனை பத்திரப்பதிவுக்கு பின், பட்டா மாறுதலுக்கு மக்கள் அலைவதை தவிர்க்க, உட்பிரிவு தேவைப்படாத இனங்களுக்கு, கணினி வழியே பட்டா மாற்ற சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட, 10 மாவட்டங்களில் அமலில் உள்ளது. இதில், நடைமுறை குழப்பங்களை தீர்க்க, 'ஆன்லைன்' பத்திரப்பதிவு சாப்ட்வேரில், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இதன்படி, கணினி வழியே மாற்றம் செய்யதக்க சொத்து பதிவுகளை, தகுதி வாரியாக பிரித்து, சார் - பதிவாளர் ஒப்புதல் அளிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான, வழிகாட்டி நடைமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024