Tuesday, March 16, 2021

பல்லாவரம் வேட்பாளர்களுக்கு மக்கள் அறிவிப்பு

பல்லாவரம் வேட்பாளர்களுக்கு மக்கள் அறிவிப்பு

Added : மார் 16, 2021 06:03

குரோம்பேட்டை - பல்லாவரம் தொகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக, உறுதியளிக்கும் வேட்பாளரை ஆதரிக்கப்போவதாக, அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.வெற்றி பெறும் வேட்பாளர், பாதாள சாக்கடை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். பல்லாவரம் தொகுதியில், தி.மு.க., - இ.கருணாநிதி, அ.தி.மு.க., - சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், தே.மு.தி.க., - முருகேசன், மக்கள் நீதி மய்யம் - செந்தில் ஆறுமுகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.இவர்கள், தொகுதியில் உள்ள நலச்சங்கத்தினரை சந்தித்து, ஆதரவு திரட்டி வருகின்றனர். அ.தி.மு.க., வேட்பாளரான சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், நேற்று முன்தினம், குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு மையத்தின் நிர்வாகிகளை சந்தித்து, ஆதரவு திரட்டினார்.அப்போது, விழிப்புணர்வு மையத்தினர், எட்டு கோரிக்கைகளை முன்வைத்தனர். பல்லாவரம் நகராட்சியை, சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் நீர்நிலைகளை காப்பாற்றி, சீரமைக்க வேண்டும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் குப்பைக்கு வரி வசூலிப்பதை கைவிட வேண்டும்குரோம்பேட்டை அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும்பல்லாவரம் நகராட்சி பாதாள சாக்கடை திட்ட ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். இதைக்கேட்ட, சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், வெற்றி பெற்றவுடன், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இதே கோரிக்கைகளை, பிற கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களிடமும் முன்வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024