2012-ல் ரூ.493 கோடி; 2018-ல் ரூ.1,000 கோடி! பிரமிக்கவைத்த ஜெயாபச்சன் சொத்துப்பட்டியல்
சத்யா கோபாலன்
நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான ஜெயாபச்சன் தனக்கு ரூ.1000 கோடி சொத்து மதிப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சி சார்பில், உத்தரப்பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு நடிகையும் எம்.பி-யுமான ஜெயாபச்சன்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தனது வேட்பு மனுவில் தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.1000 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார்.
2012-ம் ஆண்டில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு 493 கோடி ரூபாய் என
அறிவித்திருந்தார். தற்போது இவரின் சொத்து இருமடங்கைவிட அதிகமாக உயர்ந்துள்ளது. அமிதாப்பச்சன் - ஜெயாபச்சன்
தம்பதிக்கு அசையா சொத்துகள் மட்டும் ரூ.540 கோடி உள்ளன.
இது தவிர இவர்களின் நகை மதிப்பு ரூ.62 கோடி. அதில் அமிதாப்பச்சனின் நகைகளின் மதிப்பு மட்டும் ரூ.36 கோடி. இவர்களுக்குச்
சொந்தமாக 12 கார்கள் உள்ளன. அவற்றின் சொத்து மதிப்பு சுமார் 13 கோடி ரூபாய். இருவரின் கைக்கடிகாரங்கள் மட்டும் ரூ.3.4
கோடி மதிப்பாகும். மேலும், இவர்களுக்குப் பல்வேறு இடங்களில் பல நிலங்கள் உள்ளன.
இதேபோன்று கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜ.க-வின் நாடாளுமன்ற உறுப்பினராக வேட்பு மனுத்தாக்கல் செய்த ரவிந்திர கிஷோர், அவரின் சொத்து மதிப்பு 800 கோடி ரூபாய் எனக் குறிப்பிட்டிருந்தார். தற்போது ஜெயாபச்சன், ரவிந்திர கிஷோரைவிட அதிகசொத்துகள் பெற்று இந்தியாவின் பணக்கார நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

No comments:
Post a Comment